நாள்: 20.11.2024
நல்ல நேரம் :
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
கௌரி நல்ல நேரம் :
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை
இராகு:
மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை
சூலம் – வடக்கு
மேஷம்:
மேஷ ராசியினர் இந்த நாளில் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவார்கள். இந்த நாள் தொழிலிலும், வேலையிலும் மிகுந்த ஆர்வத்துடன் காணப்படுவார்கள். இந்த நாள் இனிதே அமையும்.
ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்று புதிய நட்பு உண்டாகும். புதியவர்களின் அறிமுகத்தால் வாழ்வில் புது தொடக்கம் பிறக்கும். தீயவர்கள் நட்பு விலகும். நம்பிக்கை அதிகரிக்கும் நாள்..
மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். நீண்ட நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல் நீங்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். வீட்டில் மழலை சத்தம் உண்டாகும்.
கடகம்:
கடக ராசியினர் கவனமாக இருக்க வேண்டும். வீண் குழப்பத்தால் மறதி ஏற்படும். வெளியில் முக்கிய வேலையாக செல்லும்போது தேவையானவற்றை எடுத்துக் கொண்டு விட்டோமா என்பதை ஒரு முறைக்கு இருமுறை சரிபார்த்துக் கொள்ளவும். குடும்பத்தினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடாது.
சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இந்த நாள் சில தடங்கல் உண்டாகும். முக்கிய காரியங்களை ஒத்தி வைப்பது நல்லது ஆகும். தவிர்க்க முடியாத பயணங்களுக்கு தேவையானவற்றை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளவும். பண விவகாரத்தில் கவனம் தேவை.
கன்னி:
கன்னி ராசியினர் இன்று தைரியத்துடன் காணப்படுவீர்கள். கன்னி ராசியினர் அதேசமயம் கவனத்துடன் இருக்க வேண்டும். நீங்கள் தொலைத்த ஒன்று உங்களைத் தேடி வரும். நம்பிக்கை அதிகரிக்கும்.
துலாம்:
துலாம் ராசியினருக்கு மனதில் அமைதி உண்டாகும். மனதில் அமைதியான சூழல் ஏற்படும் இனிதான சம்பவங்கள் நடக்கும். பிரிந்திருந்த காதலர்கள் ஒன்று சேர்வார்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும்.
விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இந்த நாள் வெற்றிகரமான நாள் ஆகும். நீண்ட நாள் ஆசை இன்று நிறைவேறும். பிடித்தவர்கள் தாமாக வந்து பேசுவார்கள். உங்களை ஆழமாக நேசிக்கும் நபரை உங்களை வந்தடைவார்கள். கல்யாண யோகம் கைகூடும்.
தனுசு:
தனுசு ராசியினருக்கு இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியான நாள் ஆகும். குடும்பத்தினருடன் நேரம் செலவழிப்பீர்கள். நீண்ட தூர பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பாராத யோகம் கிட்டும். வழக்குகள் சாதகமாக முடியும்.
மகரம்:
மகரத்திற்கு பணிபுரியும் இடங்கள், அலுவலகங்களில் புதிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும். பெற்றோர்கள் பெருமைப்படும் அளவிற்கு பிள்ளைகள் செயல்படுவார்கள். கல்வியில் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். குடும்பத்தில் சந்தோஷம் பொங்கும்.
கும்பம்:
கும்ப ராசியினருக்கு இந்த நாள் சிக்கலான நாள் ஆகும். ஒருவித குழப்பம் மனதில் நீடிக்கும். பிடித்தவர்களிடம் வார்த்தையை கவனமாக பயன்படுத்த வேண்டும், ஆலய வழிபாடு மேற்கொள்வது நல்லது ஆகும். நண்பர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். சிவனை வணங்குவது நல்லது.
மீனம்:
மீன ராசியினருக்கு இந்த நாள் உதவிகள் குவியும். நீண்ட நாள் வர வேண்டிய கடன் தொகை வசூல் ஆகும். குழந்தைகள் உடல்நலனில் இருந்து வந்த சிக்கல் குறையும். கவலைகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும்.