நாள்: 29.03.2022


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :









இரவு 7.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை


இராகு :


காலை 3 மணி முதல் காலை 4.30 மணி வரை


குளிகை :


காலை 12 மணி முதல் காலை 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் – வடக்கு


மேஷம் :


இன்று சிறப்பான நாள். உங்கள் இலட்சியங்கள் நிறைவேறும் நாள். புதிய தொடர்புகள் கிடைக்கும். நட்பு வட்டராம் விரிவடையும்.


ரிஷபம்:


இன்று மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படும். இதன் மூலம் உங்கள் கனவுகள் நிறைவேறும். இலக்குகளை அமைத்துக் கொண்டு செயலாற்றுவது சிறந்தது. உங்கள் நண்பர்கள் மற்றும் உடனிருப்பவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள்.


மிதுனம் :


இன்று சாதகமான பலன்கள் காண உகந்த நாள் அல்ல. உங்கள் இலக்குகளை அடைய கடினமாக போரட வேண்டும். அதிர்ஷ்ட வாய்ப்பும் குறைவாக உள்ளது. முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.


கடகம் :


இன்று அனுகூலமான பலன்கள் கிடைக்காது. இன்றைய நாள் சீராகச் செல்ல அனுசரணையான போக்கு தேவை. சில சமயங்களில் உங்களிடம் அவநம்பிக்கை உணர்வு தோன்றும்.தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


சிம்மம்:


இன்று முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். உங்களின் தொடர் முயற்சி மூலம் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். உறுதியான போக்கு மூலம் நீங்கள் தடைகளை வெல்வீர்கள்.


கன்னி :


இன்று சாதகமான சூழ்நிலை காணப்படும். அது உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். இன்று எடுக்கும் முடிவுகள் நன்மை அளிக்கும். அதிஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும்.


துலாம் :


இன்று சற்று மந்தமான நாளாக இருக்கும். ஆன்மீக நிகழ்ச்சி அல்லது சொற்பொழிவுகளில் பங்கு கொள்வது உங்களுக்கு ஆறுதல் அளிக்கும். பிரார்த்தனை சிறந்த பலனளிக்கும்.


விருச்சிகம் :


இன்று சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். சாவலான சூழ்நிலை காரணமாக பதட்டம் காணப்படும். இசை கேட்பது மற்றும் திரைப்படம் பார்த்தல் போன்ற நிகழ்சிகள் பதட்டத்தை விலக்கி உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும்.


தனுசு :


இன்று எதிர்பாராத நன்மைகள் விளையும். இன்று நீங்கள் விரைந்து முடிவெடுப்பீர்கள். உங்கள் திறமை உங்கள் நண்பர்கள் உட்பட மற்றவரை ஆச்சரியப்படுத்தும். நீங்கள் கவனமாகவும் விழிப்புடனும் உங்கள் இலக்குகளை அடைவீர்கள்.


மகரம் :


இன்று சம்பவங்கள் சீராக நடைபெற அனுசரணையான அணுகுமுறை தேவை. உங்கள் செயல்களில் விவேகம் வேண்டும். முக்கியமான விஷயங்களில் முக்கியமான முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.


கும்பம்:


இன்று உங்கள் வளர்ச்சியில் தடைகள் காணப்படும். இதனால் உங்களுக்கு வருத்தமும். பதட்டமும் , அமைதியின்மையும் காணப்படும். பிரார்த்தனை மற்றும் தியானம் மன அமைதி பெற உங்களுக்கு உதவும்.


மீனம்:


இன்று மகிழ்சிகரமான நாளாக இருக்காது.உங்கள் வளர்ச்சியை தாமதப் படுத்தும் வகையில் இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். உங்கள இலக்குகளை அடைய முறையாக திட்டமிட வேண்டும்.




Also Read | Guru Peyarchi 2022: குருபெயர்ச்சியால் எந்த ராசிக்காரருக்கு கோடீஸ்வர யோகம்..? உங்களுக்கு என்ன பலன் தெரியுமா..?


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண