RasiPalan Today July 08:


நாள்: 08.07.2023 - சனிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பொறுப்புகளின் மூலம் மகிழ்ச்சி ஏற்படும்.  நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். ஆராய்ச்சி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். தாமதம் விலகும் நாள்.


ரிஷபம்



உடன்பிறந்தவர்களால் ஆதாயம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். வீட்டை புதுப்பிப்பது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வாக்குறுதிகள் அளிப்பதை தவிர்க்கவும். திடீர் வரவுகள் உண்டாகும். எதிர்காலம் தொடர்பான புரிதல் ஏற்படும். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். புதிய வியாபாரம் குறித்த எண்ணங்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள்.


மிதுனம்


எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். குழந்தைகளை பற்றிய புரிதல் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் சந்திப்புகளின் மூலம் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். விவேகம் வேண்டிய நாள்.


கடகம்


உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் மேம்படும். சமூகப் பணிகளில் விவேகம் வேண்டும். தொழில் நிமிர்த்தமான அலைச்சல்கள் அதிகரிக்கும். புதிய கொள்முதல்களில் கவனம் வேண்டும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் தாமதம் ஏற்படும். தடைகள் நிறைந்த நாள்.


சிம்மம்


குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். பழைய வாகனங்களை மாற்றி அமைப்பீர்கள். புதிய இலக்குகள் பிறக்கும். சுபகாரியம் சார்ந்த விரயங்கள் உண்டாகும். போட்டிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வரவுகள் நிறைந்த நாள்.


கன்னி


நினைத்த பணிகள் ஈடேறும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் புதிய அறிமுகம் உண்டாகும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே   விட்டுக்கொடுத்துச் செல்லவும். மதிப்பு நிறைந்த நாள்.


துலாம்


நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களை அனுசரித்துச் செல்லவும். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் மேம்படும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். விரயம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.


தனுசு


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வழக்கு விஷயங்களில் தீர்வு கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.


மகரம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். மனை விற்றல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பங்கள் விலகி தெளிவு உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.


கும்பம்


திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். சமூகப் பணிகளில் வித்தியாசமான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் அனுபவம் மேம்படும். அன்பு நிறைந்த நாள்.


மீனம்


குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். வியாபார அபிவிருத்திக்கான சிந்தனைகள் மேம்படும். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும்.  விலகி சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் தோன்றி மறையும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். நன்மை நிறைந்த நாள்.