RasiPalan Today August 08: 


நாள்: 08.08.2023 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மதியம் 1.45 மணி முதல் மதியம் 2.45 மணி வரை


இராகு :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை :


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற அலைச்சல்கள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாக கிடைக்கும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். அலுவலகப் பணிகளில் தாமதம் உண்டாகும். மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். நேர்மறை சிந்தனைகளால் தெளிவு பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


தம்பதிகளுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். பயணங்களால் விரயங்கள் உண்டாகும். உறவுகளின் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். வியாபாரத்தில் நயமான பேச்சுக்களால் நன்மை உண்டாகும். அலுவலகத்தில் மறைமுகமான எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நினைத்த சில பணிகளில் போராட்டங்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.


மிதுனம்


பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடும். புதிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தேர்ச்சி நிறைந்த நாள்.


கடகம்


அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். மனை சார்ந்த செயல்களால் ஆதாயம் உண்டாகும். வேலையாட்கள் மாற்றம் குறித்த சிந்தனைகள் உண்டாகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு கூடும். திட்டமிட்ட சில பணிகள் பலிதமாகும். விரயம் நிறைந்த நாள்.


சிம்மம்


மனதளவில் இருந்துவந்த சோர்வு குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். தடைபட்ட பணிகள் முடிவு பெறும். உறவினர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாகும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். ஓய்வு வேண்டிய நாள்.


கன்னி


செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். ஜாமீன் சார்ந்த விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பணிபுரியும் இடத்தில் மாற்றமான சூழல் உண்டாகும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். நிதானம் வேண்டிய நாள்.


துலாம்


திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். அசதிகள் நிறைந்த நாள்.


விருச்சிகம்


தந்திரமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உறவினர்களின் வழியில் மதிப்பு உயரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். நீண்ட நாள் சிக்கல்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். மறதி விலகும் நாள்.


தனுசு


உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உயர்கல்வியில் இருந்துவந்த இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த கனவுகள் கைகூடும்.  புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.


மகரம்


நினைத்த சில காரியங்கள் தாமதமாக முடியும். பழைய பிரச்சனைகளைப் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தாயுடன் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகளால் தாமதம் குறையும். பக்தி நிறைந்த நாள்.


கும்பம்


சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் ஏற்படும். பிரபலமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபார ஒப்பந்தங்கள் கைகூடும். உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். சலனம் நிறைந்த நாள்.


மீனம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு சார்ந்த செயல்களில் பொறுமை வேண்டும். தோற்றப்பொலிவு மேம்படும். நவீன கருவிகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொருளாதார சிக்கல்கள் குறையும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.