நாள் - 05.09.2023 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல்  பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். மற்றவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவருடன் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தூரத் தேச பயண சிந்தனைகள் மேம்படும். படிப்பில் ஆர்வமின்மை உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


பணி நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அனுபவம் உண்டாகும். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகளால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாமதம் நிறைந்த நாள்.


மிதுனம்


வெளியூர் பயணிகளால் ஆதாயம் உண்டாகும். உடனிருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கடகம்


வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் அனுபவம் பிறக்கும். தைரியம் வேண்டிய நாள்.


சிம்மம்


ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரப் பணிகளில் தெளிவு பிறக்கும். திடீர் பயணங்களால் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.


கன்னி


உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். குடும்ப உறுப்பினர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். அரசியல்வாதிகள் பொறுமையுடன் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயனற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். விவேகம் வேண்டிய நாள்.


துலாம்


இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான பக்குவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரிய எண்ணங்கள் கைகூடி வரும். நன்மை நிறைந்த நாள்.


விருச்சிகம்


புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். இனம்புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார முதலீடுகளில் சிந்தித்துச் செயல்படவும். தடைகள் விலகும் நாள்.


தனுசு


பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். அன்பு நிறைந்த நாள்.


மகரம்


மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். தாயின் வழியில் ஆதரவு கிடைக்கும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சகோதரர் வழியில் அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் ஏற்படும்.  வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். லாபம் நிறைந்த நாள்.


கும்பம்


மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரப் பணிகள் மத்திமமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.


மீனம்


தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக பணிகளில் நுட்பமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். நிதானம் வேண்டிய நாள்.