நாள் - 04.09.2023 - திங்கள் கிழமை
நல்ல நேரம்:
காலை 6.15 மணி முதல் காலை 7.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
குளிகை:
பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை
எமகண்டம்:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
எதிலும் முன்கோபமின்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். மற்றவர்களைப் பற்றிய கருத்துகளைத் தவிர்க்கவும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். தற்பெருமையான பேச்சுக்களைத் தவிர்க்கவும். மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
ரிஷபம்
எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். திடீர் பயணங்களின் மூலம் அனுபவம் ஏற்படும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தூக்கமின்மை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். எண்ணிய சில காரியங்கள் நிறைவேறுவதில் காலதாமதம் உண்டாகும். விரயம் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபாரப் பணிகளில் லாபம் உண்டாகும். இடது காது தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிலும் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் செயல்படுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி கிடைக்கும். நவீன யுக்திகளைப் பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். அனுபவ அறிவால் சில முடிவுகளை எடுப்பீர்கள். புரிதல் நிறைந்த நாள்.
கடகம்
உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். பணி நிமிர்த்தமான நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். தொழிற்கல்வியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மாறுபட்ட அனுபவங்களால் பக்குவம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்துப் பார்ப்பீர்கள். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
கன்னி
ஆன்மிக பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்திப் பாராட்டுகளைப் பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.
துலாம்
பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். மனதளவில் இருந்துவந்த தாழ்வு மனப்பான்மை குறையும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.
விருச்சிகம்
சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
தனுசு
செல்வச்சேர்க்கைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உத்தியோக பணிகளில் கவனம் வேண்டும். வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். மனதில் நினைத்த காரியங்கள் கைகூடி வரும். மறைமுகமான சில விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வேலையாட்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆசைகள் பிறக்கும் நாள்.
மகரம்
உறவினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த பிரச்சனைகள் குறையும். விவசாயப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். உறவினர்களால் ஏற்பட்ட வருத்தங்கள் குறையும். பெரியவர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும். அரசு உதவிகள் சிலருக்குச் சாதகமாக அமையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கும்பம்
தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். புதிய வேலை சார்ந்த முயற்சிகள் கைகூடும். உங்களின் பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் ஒத்துழைப்பு ஏற்படும். மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பணிபுரியும் இடத்தில் திருப்தியான சூழல் அமையும். பொறுமை வேண்டிய நாள்.
மீனம்
மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். வரவுகள் நிறைந்த நாள்.