RasiPalan Today July 31: 


நாள்: 31.07.2023 - திங்கள் கிழமை


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


குளிகை :


மதியம் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம் :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


சூலம் - கிழக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். தெய்வீக செயல்களில் ஈடுபாடு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். தனித்திறமைகளை வளர்த்திக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள். 


ரிஷபம்


உயர் அதிகாரிகளிடத்தில் அளவுடன் இருக்கவும். குடும்ப உறுப்பினர்களால் மன வருத்தங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.


மிதுனம்


எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஆதரவு மேம்படும். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமைகள் வெளிப்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். தடைப்பட்ட சுபகாரியங்கள் நடைபெறும். அமைதி நிறைந்த நாள்.


கடகம்


கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உறவினர்களின் வருகை உண்டாகும். கனிவான பேச்சுக்களால் காரிய சித்தி ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில நுணுக்கங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பணிகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். அனுபவம் மிக்கவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை உண்டாக்கும். முயற்சிகள் ஈடேறும் நாள்.


சிம்மம்


குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் புதுவிதமான சூழல் உண்டாகும். வித்தியாசமான சிந்தனைகள் மற்றும் முயற்சிகள் அதிகரிக்கும். உடனிருப்பவர்களை பற்றிய சுயரூபம் வெளிப்படும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். பாசம் நிறைந்த நாள்.


கன்னி


நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். முன்யோசனையின்றி செயல்படுவதை குறைத்து கொள்ளவும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் அனுகூலமான சூழல் ஏற்படும். விவேகம் வேண்டிய  நாள்.


துலாம்


மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் வீட்டார்கள் ஆதரவாக இருப்பார்கள். பத்திரம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். எழுத்து சார்ந்த துறைகளில் சாதகமான சூழல் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். விளையாட்டான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றம் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். வியாபார பணிகளில் வரவுகள் அதிகரிக்கும். அறிமுகம் நிறைந்த நாள்.


தனுசு


பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். வியாபாரத்தில் உள்ள நெளிவு, சுழிவுகளை அறிந்து செயல்படவும். பணிபுரியும் இடத்தில் மற்றவர்களை பற்றிய கருத்துகளை தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். வெளியூர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். கடன் தொடர்பான சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். போட்டிகள் நிறைந்த நாள்.


மகரம்


வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். தடைகளின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாழ்வு மனப்பான்மையால் ஒருவிதமான குழப்பம் ஏற்படும். புதுவிதமான பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகள் மீது ஆர்வம் ஏற்படும். உபரி வருமானம் குறித்த முயற்சிகள் கைகூடும். அமைதி நிறைந்த நாள்.


கும்பம்


பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் உதவி கிடைக்கும். பழைய பிரச்சனைகள் குறையும். வீட்டினை பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் துரிதம் மேம்படும். மூத்த சகோதரர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். விருத்தி நிறைந்த நாள்.


மீனம்


அதிகார பதவியில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசு பணிகளில் ஆதாயம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய யுக்திகளை பயன்படுத்துவீர்கள். திட்டமிட்ட காரியங்கள் சில அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். குழப்பம் விலகும் நாள்.