நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம்:


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆடம்பரமான பொருட்களின் மீது ஆர்வம் அதிகரிக்கும். கவனக்குறைவினால் அலைச்சல்கள் மேம்படும். கருத்துக்களை கூறும் பொழுது நபர்களின் தன்மையை அறிந்து செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் விழிப்புணர்வு வேண்டும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.


ரிஷபம்


எந்தவொரு செயல்பாடுகளிலும் திட்டமிட்டு செயல்படுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் நீங்கி உறவுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். விவசாயம் சார்ந்த பொருட்களின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மனை சார்ந்த பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரங்களில் எண்ணிய சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம்


வியாபாரம் நிமிர்த்தமான புதிய முயற்சிகள் கைகூடும். சிக்கலான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாழ்க்கை துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு நம்பிக்கையை உண்டாக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவு மேம்படும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். தேவைகள் நிறைவேறும் நாள்.


கடகம்


இணைய பரிவர்த்தனைகளில் கவனத்துடன் செயல்படவும். உழைப்பிற்கு உண்டான மதிப்பு காலதாமதமாக கிடைக்கும். பயணத்தின்போது மிதவேகம் அவசியமாகும். நெருக்கமானவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். புதிய வகை உணவினை தவிர்ப்பது நல்லது. வியாபார பணிகளில் மந்தத்தன்மை ஏற்படும். அரசு பணிகளில் இருப்பவர்கள் நிதானத்துடன் செயல்படவும். ஓய்வு நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபார பணிகளில் எதிர்பார்த்த லாபம் குறைவாக கிடைக்கும். வெளியூர் பயணங்களில் சிந்தித்து செயல்படவும். நண்பர்களுடன் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் விரயங்கள் உண்டாகும். நுட்பமான விஷயங்களை வெளிப்படுத்தும் பொழுது சூழ்நிலைகளை அறிந்து செயல்படவும். தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். மறதி நிறைந்த நாள்.


கன்னி


வாழ்க்கை துணைவரின் எண்ணங்களை அறிந்து செயல்படவும். உற்பத்தி சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். போட்டி, பந்தயங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். தாய்வழி உறவுகள் ஆதரவாக செயல்படுவார்கள். பங்கு வர்த்தகம் தொடர்பான பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவி கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


துலாம்


செய்கின்ற செயல்பாடுகளில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்படும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். சாதுரியமாக செயல்பட்டு எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


விருச்சிகம்


குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனம் வேண்டும். நகைச்சுவையான பேச்சுக்களை தவிர்க்கவும். எதிலும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


தனுசு


மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான முயற்சிகள் ஈடேறும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி பெறுவீர்கள். சஞ்சலம் நிறைந்த நாள்.


மகரம்


குடும்ப உறுப்பினர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். புதிய ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். ஆடம்பரமான செலவுகளின் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் உண்டாகும். வித்தியாசமான அணுகுமுறையின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கி கொள்வீர்கள். பணிகளில் தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். சகோதரிகளின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். தடைகள் குறையும் நாள்.


கும்பம்


உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான சூழல் அமையும். புதிய வேலை சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். வியாபார அபிவிருத்தி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடம் கலகலப்பான சூழ்நிலைகள் ஏற்படும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். புதிய முதலீடுகள் சார்ந்த விஷயங்களுக்கு தகுந்த ஆலோசனைகள் கிடைக்கும். தனவரவு மேம்படும் நாள்.


மீனம்


வியாபாரம் நிமிர்த்தமான அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். செய்கின்ற பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மற்றவர்களின் விஷயங்களில் கருத்துக்கள் கூறுவதை தவிர்க்கவும். சமூக நிகழ்வுகளின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். நேர்மையற்ற வழிமுறைகளை தவிர்ப்பது முன்னேற்றத்திற்கு நல்லது. வாகனம் தொடர்பான விஷயங்களில் எதிர்பாராத சில விரயங்கள் உண்டாகும். ஆசைகள் மேம்படும் நாள்.