நாள்: 26.04.2023 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
புதிய யுக்திகளால் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நவீன தொழில்நுட்ப கருவிகளை வாங்குவீர்கள். சொத்துக்களை விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோக பணிகளில் திருப்தியான சூழல் அமையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் அனுகூலமான சூழ்நிலைகள் ஏற்படும். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்காலம் தொடர்பான சேமிப்பு அதிகரிக்கும். தடைகள் குறையும் நாள்.
மிதுனம்
செய்கின்ற செயல்பாடுகளில் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்களை பற்றிய கருத்துகள் கூறுவதை தவிர்க்கவும். வியாபார பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
கடகம்
உத்தியோக பணிகளில் அலைச்சல்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். கனிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை குறைக்கும். வியாபார பணிகளில் சாதகமான சூழல் அமையும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்து செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
சிம்மம்
பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கைகூடும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
கன்னி
உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். உறவினர்களிடம் கலந்தாலோசித்து முக்கிய முடிவினை எடுப்பீர்கள். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். வெற்றி நிறைந்த நாள்.
துலாம்
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார பணிகளில் புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ள சில பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். செல்வாக்கு நிறைந்த நாள்.
விருச்சிகம்
மனதில் ஏற்பட்ட இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் குழப்பம் உண்டாகும். சந்தேக உணர்வுகளால் நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துகளில் உள்ள உண்மையை அறிந்து முடிவு எடுக்கவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் அனுசரித்து செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துகளை பகிர்வது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.
தனுசு
மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ள சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். அன்பு நிறைந்த நாள்.
மகரம்
எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். தேவையற்ற பேச்சுக்களை குறைத்து கொள்வது நல்லது. உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கமிஷன் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு லாபம் ஏற்படும். வெளியூர் பயணங்களின் மூலம் அலைச்சலும், புதிய அனுபவமும் உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முக்கியத்துவம் அதிகரிக்கும். உடனிருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வரவுகள் நிறைந்த நாள்.
கும்பம்
மனதில் வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றி கொள்வீர்கள். போட்டிகள் நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பார்த்த சில பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அதிரடியான சில செயல்களின் மூலம் போட்டிகளை சமாளிப்பீர்கள். பணிபுரியும் இடத்தில் அமைதி ஏற்படும். உழைப்பால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். பயணங்கள் சார்ந்த விஷயங்கள் கைகூடும். மேன்மை நிறைந்த நாள்.