நாள்: 25.05.2023 - வியாழக்கிழமை


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


இராகு:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை





குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


கால்நடைகள் தொடர்பான வியாபாரத்தில் லாபம் மேம்படும். விவாதங்களின் மூலம் முன்னேற்றமான சூழ்நிலைகளை அமைத்துக் கொள்வீர்கள். வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகளில் ஆர்வம் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடையாக இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் மனதில் அதிகரிக்கும். சிரமம் குறையும் நாள்.


ரிஷபம்


தொழிலில் புதிய வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றத்தை உருவாக்கிக் கொள்வீர்கள். சமூக பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த மறைமுக எதிர்ப்புகளை அறிவீர்கள். சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் தொடர்பான பணிகளில் திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். விவேகம் வேண்டிய நாள்.


மிதுனம்


எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குடும்பத்தில் உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். காப்பீடு தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவேண்டிய தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேலோங்கும். கல்வி தொடர்பான வெளியூர் பயணங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம்


காப்பீடு தொடர்பான தனவரவுகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். குண நலன்களில் மாற்றம் உண்டாகும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆலோசனைகள் புதுவிதமான நம்பிக்கையை ஏற்படுத்தும். தோற்றப்பொலிவு பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். ஜவுளி வியாபாரம் தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழ்நிலைகள் உண்டாகும். வருத்தம் விலகும் நாள்.


சிம்மம்


கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்லவும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களின் மீது விருப்பம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பணி நிமிர்த்தமான ரகசியங்களை பகிராமல் இருக்கவும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மற்றவர்களின் செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் மேம்படும். ஊக்கம் நிறைந்த நாள்.


கன்னி


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார அபிவிருத்திக்கான முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று பாராட்டுகளை பெறுவீர்கள். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். பூர்வீகத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி சாதகமான முடிவு கிடைக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வதன் மூலம் லாபம் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.  


துலாம்


உறவினர்களிடத்தில் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். புதுவிதமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அரசு தொடர்பான பணிகளில் செய்யும் முயற்சிகளின் மூலம் முன்னேற்றம் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.


விருச்சிகம்


ஒளிந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். வசதி வாய்ப்புகளை மேம்படுத்துவீர்கள். வாகன பயணங்களின் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த இலக்கை அடைவீர்கள். இளைய உடன்பிறப்புகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். சாமர்த்தியமான செயல்பாடுகளின் மூலம் சாதகமான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். முயற்சிகள் ஈடேறும் நாள்.


தனுசு


செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பிரிந்து சென்றவர்களை பற்றிய நினைவுகள் ஒருவிதமான மந்தத்தன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். உடனிருப்பவர்களிடம் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வாகன பயணங்களில் தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். நிதானம் வேண்டிய நாள்.


மகரம்


குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மற்றும் நட்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வர்த்தகம் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். உடனிருப்பவர்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். புதுவிதமான அனுபவத்தின் மூலம் மாற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.  


கும்பம்


உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதில் தோன்றும் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் தொடர்பான பிரச்சனைகள் படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.


மீனம்


கல்வி சார்ந்த பணிகளில் நிபுணர்களின் ஆலோசனைகளால் தெளிவு பிறக்கும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். இலக்கியம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மற்றவர்களிடம் வீண் வாதங்களை தவிர்க்கவும். சகோதரர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து செல்வது நல்லது. பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நுணுக்கமான விஷயங்களை அறிந்து கொள்வீர்கள். வெற்றி நிறைந்த நாள்.