நாள்: 24.05.2023 - புதன் கிழமை
நல்ல நேரம் :
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
குளிகை :
காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
எமகண்டம் :
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களால் ஆதரவு அதிகரிக்கும். எதிர்பாலின மக்களின் மூலம் அனுகூலமான சூழல் உண்டாகும். குடும்ப பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய ஆராய்ச்சி சம்பந்தமான தேடல் உண்டாகும். மனதில் புதுவிதமான, வித்தியாசமான எண்ணங்கள் தோன்றும். நிர்வாகத்தில் தனித்திறமை புலப்படும். நன்மை நிறைந்த நாள்.
ரிஷபம்
புதிய முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். ஆரோக்கியம் நிமிர்த்தமான எண்ணங்கள் மேம்படும். சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றமான தருணங்கள் உண்டாகும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கலைத்துறையை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் தைரியத்துடன் சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். முயற்சிகள் நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் நெருக்கடிகள் குறையும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வர்த்தக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். பூர்வீகம் சம்பந்தமான சுப விரயங்கள் செய்வீர்கள். நலம் நிறைந்த நாள்.
கடகம்
இனம்புரியாத சிந்தனைகளால் செயல்களில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். வியாபாரம் சார்ந்த பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்களுடைய செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது உத்தமமாகும். முன்கோபத்தால் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். வெளிவட்டாரத்தில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். குணநலன்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செல்வாக்கு நிறைந்த நாள்.
சிம்மம்
செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் அகலும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். தொழில் சார்ந்த புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதில் புதுவிதமான தேடல் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.
கன்னி
நண்பர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சமூகத்தில் பெரியோர்களின் அறிமுகம் கிடைக்கும். விவசாயப் பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். தடைபட்ட தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு லாபகரமான வாய்ப்புகள் அமையும். விரயம் நிறைந்த நாள்.
துலாம்
குறுந்தொழில் தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். போட்டி, பந்தயங்களில் திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பால் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிகம்
குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சாதுரியமான பேச்சுக்களின் மூலம் சாதகமான சூழலை உருவாக்குவீர்கள். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
பழைய நினைவுகளின் மூலம் செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். உறவுகள் வழியில் அனுசரித்து செல்லவும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் அவ்வப்போது ஏற்படும். மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.
மகரம்
மாறுபட்ட அணுகுமுறைகளின் மூலம் நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்பும், மதிப்பும் அதிகரிக்கும். குடும்ப விவகாரங்களை மற்றவர்களிடம் பகிர்வதை குறைத்துக் கொள்ளவும். வெளியூர் தொடர்பான வேலை வாய்ப்புகள் சாதகமாக அமையும். விருப்பம் நிறைவேறும் நாள்.
கும்பம்
சேமிப்பை மேம்படுத்துவதற்கான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்பும், ஆதரவும் மேம்படும். உத்தியோக பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயம் சார்ந்த துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். வாழ்வு நிறைந்த நாள்.
மீனம்
மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். எதிர்பாராத சிலரின் நட்பு மாற்றத்தை ஏற்படுத்தும். வழக்கு சார்ந்த விஷயங்களில் திருப்பங்கள் உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். நிதானம் வேண்டிய நாள்.