நாள்: 22.12.2022 (வியாழக்கிழமை)


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை


மாலை 4.45 முதல் 5.45 மணி வரை 









காலை 10.45  மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 9.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை


இராகு :


காலை 9.00 மணி முதல் 10.30 மணி வரை


குளிகை :


காலை 6 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


நண்பகல் 1.30 மணி முதல் காலை 3.00  மணி வரை 


சூலம் – கிழக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,  குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து நிறைவேற்றவும். பயணங்களால் ஆதாயம் உண்டு. நவீன பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெரும். களிப்பு நிறைந்த நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே, சமூக நலனில் அக்கறை ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கைகொடுக்கும். பயணங்கள் தள்ளிப்போகும். தொழில், வியாபாரம் சிறப்பாக அமையும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல தகவல் வரும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அடுத்தவருக்கு உதவி செய்வதில் ஆர்வம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் தேவை. மாற்றம் நிறைந்த நாள்


கடகம் :


கடக ராசி நேயர்களே, குடும்ப ரகசியங்களை பாதுகாக்கவும். சுற்றி இருப்பவர்களுடன் நல்லுறவு ஏற்படும். மறதி தொல்லை வந்து நீங்கும். தொழில், வியாபாரத்தில் உள்ள சூட்சமங்கள் புரியவரும். பரிவு நிறைந்த நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, குடும்ப சிக்கல்கள் அகலும். எதிலும் முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. புது நபர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் பாராட்டு கிடைக்கும். விழிப்புணர்வு வேண்டிய நாள் 


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்களை குறை சொல்வதை தவிர்க்கவும். . வாகனத்தில் மெதுவாக செல்லவும். தொழில், வியாபாரத்தில் நெருக்கடிகள் நீங்கும். தனவரவு மேம்படும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். அசதியும், சோர்வும் நீங்கி உற்சாகம் ஏற்படும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். தொழில், வியாபாரத்தில் போட்டிகள் குறையும். தடைகள் விலகும் நாள்.


விருச்சிகம்


விருச்சிக ராசி நேயர்களே, வெளிவட்டாரத்தில் நல்ல மதிப்பு கிடைக்கும். தக்க சமயத்தில் நண்பர்கள் கைகொடுப்பர். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். உத்யோகத்தில் பல சலுகைகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுவும். குல தெய்வ பிராத்தனையை நிறைவேற்றவும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். புது தொழில் யோகம் அமையும். பொறுமை வேண்டிய நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,  மன வலிமை கூடும். யாரையும் விமர்சித்து பேச வேண்டாம். நண்பர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் பழகுவர். உத்யோகத்தில் உயர்வு நிலை உண்டு. பயணங்கள் நிறைந்த நாள் 


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, 


குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். கடந்த கால சிந்தனைகள் நினைவுக்கு வரும். பெற்றோர்கள் ஆதரவு பெருகும். செய்தொழில், வியாபாரம் சிறப்படையும். ஆர்வமான நாள். 


மீனம்:


மீன ராசி நேயர்களே, எதிர்பார்த்த காரியம் விரைவில் முடியும். தேவையற்ற மன மனபயத்தை நீக்கவும். புது விஷயங்களில் ஆர்வம் கூடும். தொழில், வியாபாரத்தில் போட்டி இருக்கும். சோர்வு நீங்கும் நாள்.