நாள்: 24.08.2022


நல்ல நேரம் :


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


குளிகை :


காலை 10.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரை


எமகண்டம் :


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம் :


மேஷ ராசி நேயர்களே,


வியாபாரம் நிமிர்த்தமான வெளியூர் பயணங்களின் மூலம் அனுபவம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் மந்தமான சூழ்நிலைகள் அமையும். மதிப்பு மேம்படும் நாள்.


ரிஷபம்:


ரிஷப ராசி நேயர்களே,


செயல்பாடுகளில் சுறுசுறுப்பும், துரிதமும் ஏற்படும். பெற்றோர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். நண்பர்களின் மறைமுக உதவி கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் ஏற்படும். ரகசிய செயல்பாடுகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். முன்னேற்றம் நிறைந்த நாள்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே,


வியாபாரம் நிமிர்த்தமான சிந்தனைகள் மேம்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் கவனத்துடன் செயல்படவும். நண்பர்களுடன் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆக்கப்பூர்வமான நாள்.


கடகம் :


கடக ராசி நேயர்களே,  


நெருக்கமானவர்களை பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். வெளியூர் தொடர்பான வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். சமூகம் தொடர்பான பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். எதிராக செயல்பட்டவர்களை புரிந்து கொள்வீர்கள். எந்தவொரு செயலிலும் பதற்றமின்றி செயல்படவும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகளின் மூலம் முன்னேற்றம் ஏற்படும். நன்மையான நாள்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே,


சிந்தனையின் போக்கில் வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். செயல்பாடுகளில் சோர்வும், காலதாமதமும் ஏற்படும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். நீண்ட நாட்களாக இருந்துவந்த தனம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். பொறுமை வேண்டிய நாள்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே,


மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும், புத்துணர்ச்சியும் ஏற்படும். கடன் சார்ந்த உதவி சாதகமாக அமையும். தொழில் வளர்ச்சிக்கான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். அசதிகள் குறையும் நாள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே,


உங்களின் திறமையின் மூலம் முன்னேற்றத்தையும், பாராட்டுகளையும் பெறுவீர்கள். புதிய பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுபகாரியம் தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எதிர்ப்புகள் குறையும் நாள்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே,


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். குழந்தைகள் பொறுப்புகளை அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த மாற்றம் சாதகமாக அமையும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். விவேகம் வேண்டிய நாள்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே,


பழைய நினைவுகளின் மூலம் குழப்பமும், சோர்வும் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த பணிகளில் இழுபறியான சூழ்நிலைகள் ஏற்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில பணிகள் காலதாமதமாக நிறைவுபெறும். கூட்டாளிகளுடன் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வெளியூர் பயணங்களின் போது தேவையான ஆவணத்தையும், விவேகத்தையும் கடைபிடிக்கவும். நிதானம் வேண்டிய நாள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே,


வியாபாரம் நிமிர்த்தமான செயல்பாடுகளில் ஆதாயம் மேம்படும். குழந்தைகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய சொத்துக்கள் மற்றும் பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். புதிய தொழில்நுட்ப கருவிகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கனிவு நிறைந்த நாள்.


கும்பம்:


கும்ப ராசி நேயர்களே, 


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் கலகலப்பான சூழல் அமையும். எதிர்பாராத சில உதவியின் மூலம் மாற்றம் ஏற்படும். பேச்சுவன்மையின் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் பொழுது கவனத்துடன் செயல்படவும். தனவரவின் மூலம் சேமிப்பு மேம்படும். குழப்பம் நீங்கும் நாள்.


மீனம்:


மீன ராசி நேயர்களே,


வியாபாரத்தில் உள்ள சில நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். மனதில் ஏற்பட்ட நேர்மறையான சிந்தனைகள் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். சோதனை நிறைந்த நாள்.