பிப்ரவரி 23 - வியாழன்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை.
சூலம் - கிழக்கு
மேஷம்
எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். சகோதரர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளி உணவுகளில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். மனதில் இறை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். அனுபவம் நிறைந்த நாள்.
ரிஷபம்
மனதில் இருந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். சகோதரிகளின் வழியில் அனுகூலம் உண்டாகும். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மேம்படும். உத்தியோக பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் உண்டாகும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
மிதுனம்
வியாபார பணிகளில் புதிய அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் சிந்தனைகள் மேம்படும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். நீண்ட நாள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உத்தியோக பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.
கடகம்
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களிடம் விவாதங்கள் தோன்றி மறையும். தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில ஆதரவுகள் கிடைக்கும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அனுசரித்து நடந்து கொள்ளவும். ஆதரவு நிறைந்த நாள்.
சிம்மம்
எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்வது நல்லது. புதிய நபர்களிடம் குடும்ப விவகாரங்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.
கன்னி
உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான கடன் உதவிகள் கிடைக்கும். கடினமான காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த எண்ணங்கள் ஈடேறும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வாகன பயணங்களால் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். கவனம் வேண்டிய நாள்.
துலாம்
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் லாபம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் கைகூடும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். பக்தி நிறைந்த நாள்.
விருச்சிகம்
வியாபார பணிகளில் புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சிக்கனமாக செலவு செய்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். ஆர்வம் நிறைந்த நாள்.
தனுசு
உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். புதிய பங்குதாரர்களின் அறிமுகம் கிடைக்கும். தாயாருடன் கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி கொள்வீர்கள். விவசாய பணிகளில் சாதகமான சூழ்நிலைகள் ஏற்படும். இனிமையான நாள்.
மகரம்
எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்களின் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோகம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்து செல்வதன் மூலம் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.
கும்பம்
பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் குறையும். சக ஊழியர்களால் ஆதாயம் ஏற்படும். எதிர்பாராத சில வரவுகளின் மூலம் நெருக்கடிகள் குறையும். குழந்தைகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உதவிகள் நிறைந்த நாள்.
மீனம்
பழைய நினைவுகளின் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கல்வி சார்ந்த உதவிகள் கிடைக்கும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை ஏற்படுத்தும். தடைகள் விலகும் நாள்.