நாள்: 22.10.2022


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை









காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை


மாலை 9.30 மணி முதல் மாலை 10.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மற்றவர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நுண்கலை தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். திருத்தலம் தொடர்பான பணிகளை செய்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். மதிப்பு மேம்படும் நாள்.


ரிஷபம்


கால்நடை தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். பாசனம் சார்ந்த வசதிகள் மேம்படும். செலவுகளின் தன்மைகளை அறிந்து சிக்கனமாக செயல்படுவீர்கள். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். மனதிற்கு பிடித்த இடத்திற்கு சென்று வருவீர்கள். ஆடம்பர வாகனங்களின் மீது ஈர்ப்பு ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.


மிதுனம்


மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். தகவல் தொடர்பு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். கணிதம் தொடர்பான துறைகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். நன்மையான நாள்.


கடகம்


கல்வி சார்ந்த பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை அளிக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் மேம்படும். உதவி கிடைக்கும் நாள்.


சிம்மம்


வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் பலரின் அறிமுகத்தை பெறுவீர்கள். புதிய முடிவினை எடுக்கும் பொழுது சிந்தித்து செயல்படவும். வியாபார பணிகளில் திட்டமிட்டு செயல்படுவீர்கள். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவு மேம்படும் நாள்.


கன்னி


வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தைவழி உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேள்வி தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். நிதானமான பேச்சுக்களால் உங்களின் மீதான மதிப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.


துலாம்


மனதில் நினைத்த காரியம் எண்ணிய விதத்தில் நிறைவுபெறும். சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவினை எடுப்பீர்கள். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். உத்தியோக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.


விருச்சிகம்


பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கப் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். பழைய சிக்கல் சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வழக்கு சார்ந்த பணிகளில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். கமிஷன் சார்ந்த வியாபார பணிகளில் லாபம் அடைவீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.


தனுசு


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கும், மதிப்பும் மேம்படும். சிக்கல் விலகும் நாள்.


மகரம்


மனதில் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். கலை சார்ந்த துறைகளில் இருப்பவர்கள் சிந்தித்து செயல்படவும். மனதில் வித்தியாசமான சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். எண்ணிய சில பணிகள் நிறைவுபெறுவதில் காலதாமதம் உண்டாகும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.


கும்பம்


பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். தவறிப்போன சில முக்கிய ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தடைகள் குறையும் நாள்.


மீனம்


விடாப்பிடியாக செயல்பட்டு இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். விலகி சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய தொழில் நுட்ப கருவிகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். குழந்தைகளின் மூலம் மதிப்பு மேம்படும். வியாபாரம் சார்ந்த பணிகளில் எதிர்பாராத சில அலைச்சல்களால் புதிய அனுபவம் ஏற்படும். நிறைவான நாள்.