RasiPalan Today August 22: 


நாள்: 22.08.2023 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம் :


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு :


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை :


நண்பகல் 12.00 மணி முதல் நண்பகல் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


இன்றைய ராசிபலன்கள் 


மேஷம்


மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பதற்றமின்றி கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். அமைதி நிறைந்த நாள்.


ரிஷபம்


மனதளவில் இருந்துவந்த சஞ்சலங்கள் குறையும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும். வாகன பயணங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில வரவுகள் கிடைக்கும். எடுத்து செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வழக்கு விஷயங்களில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். தூரத்து உறவினர்கள் தேடி வருவார்கள். பழக்கவழக்கத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


மிதுனம்


பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். மனதில் புதுவிதமான ஆசைகளும், எண்ணங்களும் பிறக்கும். கற்பனை சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான சூழல் அமையும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். இன்பம் நிறைந்த நாள்.


கடகம்


மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். கல்வி பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். கால்நடை தொடர்பான பணிகளில் லாபம் அதிகரிக்கும். வியாபார ரீதியான பணிகளில் செல்வாக்கு மேம்படும். உலகியல் வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


சிம்மம்


எதிர்பாராத சில விஷயங்களின் மூலம் மனதளவில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். உத்தியோக பணிகளில் உழைப்பு அதிகரிக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு மேம்படும். மனதில் புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.


கன்னி


உணவு சார்ந்த துறைகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் மேம்படும் நாள்.


துலாம்


எதிலும் முன்யோசனையுடன் செயல்படவும். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் சிந்தித்துச் செயல்படவும். வெளிப்படையான குணத்தின் மூலம் நட்பு வட்டம் அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.


விருச்சிகம்


அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. மனதில் வித்தியாசமான சிந்தனைகள் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வம் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். வரவுகள் மேம்படும் நாள்.


தனுசு


சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் அபிவிருத்தி தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவும் அமைதியும் உண்டாகும். கவலைகள் குறையும் நாள்.


மகரம்


மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். வழக்கு தொடர்பான நுணுக்கங்களை அறிவீர்கள். வேளாண்மை தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். வெளியூர் தொடர்பான பயணங்களில் புதிய அனுபவம் உண்டாகும். உறவினர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். உயர் மட்ட அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


கும்பம்


மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். கௌரவப் பொறுப்புகளின் மூலம் ஆதரவு மேம்படும். பாகப்பிரிவினை முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் ரீதியான செயல்பாடுகளில் புதிய முடிவுகளை எடுப்பீர்கள். செலவு நிறைந்த நாள்.


மீனம்


பேச்சுக்களில் நிதானம் வேண்டும். செயல்பாடுகளில் திருப்தியற்ற மனநிலையினால் குழப்பம் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்கள் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத செலவுகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். திடீர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள்.