நாள்: 21.05.2023 - ஞாயிற்றுக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை 


சூலம் - மேற்கு


மேஷம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிறு மற்றும் குறுந்தொழிலில் ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்வி கற்கும் திறனில் வித்தியாசமான அணுகுமுறைகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் சாதகமாக அமையும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நன்மை நிறைந்த நாள்.


ரிஷபம்


விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவால் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மையை உண்டாக்கும். பயணங்களின் மூலம் இன்பமான அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவு அலைச்சலுக்கு பின்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். விரயம் நிறைந்த நாள்.


மிதுனம்


சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கோப உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. சிறு மற்றும் குறுந்தொழிலில் கடன் கொடுக்கும் போது சிந்தித்து செயல்படவும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். தனவரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். உடல் ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பயணம் நிறைந்த நாள்.


கடகம்


ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். இனம்புரியாத சில சிந்தனைகளின் மூலம் மனக்குழப்பங்கள் ஏற்படும். எதிர்பாராத திடீர் பயணங்கள் உடல் சோர்வை ஏற்படுத்தும். வித்தியாசமான சிந்தனைகள் மனதில் பிறக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களை பற்றிய  புரிதல் ஏற்படும். மறைமுகமான சில விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்வீர்கள். இனிமை நிறைந்த நாள்.


சிம்மம்


உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கால்நடை வளர்ப்பு பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான நிகழ்ச்சிகள் கைகூடும். களிப்பு நிறைந்த நாள்.


கன்னி


தொழில் சார்ந்த எண்ணங்களையும், திட்டங்களையும் நிறைவேற்றுவீர்கள். மூத்த சகோதரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். சமூகப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். குழப்பங்களில் இருந்து தெளிவுகளை பெறுவீர்கள். பெருந்தன்மையான செயல்பாடுகளின் மூலம் செல்வாக்கு அதிகரிக்கும். தாமதம் விலகும் நாள்.


துலாம்


புதிய நபர்களிடம் தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வழக்கு தொடர்பான சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள். திருப்பணி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


விருச்சிகம்


உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் காலதாமதமாகவே கிடைக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். நன்மை நிறைந்த நாள்.


தனுசு


உடன்பிறந்தவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். சமூகப் பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான தேடல் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாகன பயணங்களால் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொறுமை வேண்டிய நாள்.


மகரம்


உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். போட்டி சார்ந்த விஷயங்களில் ஈடுபாடு ஏற்படும். செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதை தவிர்ப்பது நல்லது. சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். சோர்வு விலகும் நாள்.


கும்பம்


உத்தியோக பணிகளில் அரசு சார்ந்த உதவி கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களின் மூலம் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் மனம் மகிழும் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். சிந்தனைகளின் போக்கில் மாற்றங்கள் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.


மீனம்


பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். நண்பர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்புகள் குறையும். வெளியூர் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும்.  அரசு தொடர்பான பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். தடைகள் விலகும் நாள்.