நாள்: 21.03.2023 - செவ்வாய் கிழமை


நல்ல நேரம் :


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை




இராகு :



மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை :


மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


எமகண்டம் :


காலை 9.00 மணி முதல் மதியம் 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எண்ணிய பணிகளை செய்து முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முதலீடுகள் செய்யும்போது சிந்தித்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. தெளிவு பிறக்கும் நாள்.


ரிஷபம்


எதிர்காலம் தொடர்பான எண்ணங்களும், முதலீடுகளும் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை, தாமதங்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் கிடைக்கும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கடினமான காரியங்களையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். மனதில் நினைத்த நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். செலவுகள் நிறைந்த நாள். 


மிதுனம்


வியாபார பணிகளில் தனவரவுகள் அதிகரிக்கும். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கப் பெறுவீர்கள். விவசாயம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஈடேறும். வர்த்தக பணிகளில் லாபம் மேம்படும். நண்பர்கள் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவுகள் நிறைந்த நாள்.


கடகம்


உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். புனித தலங்களுக்கு சென்று வருவதற்கான சூழல் அமையும். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் அலைச்சல்கள் ஏற்படும். ஆதரவு மேம்படும் நாள்.


சிம்மம்


உத்தியோக பணிகளில் விழிப்புணர்வுடன் செயல்படவும். குழந்தைகளின் வழியில் அலைச்சல்கள் உண்டாகும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கு ஏற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களால் விரயங்கள் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோக பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மாற்றத்தை ஏற்படுத்தும். பகைகள் விலகும் நாள்.


துலாம்


மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். எழுத்து சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். தகவல் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். மனதில் புதுவிதமான தெளிவுடன் காணப்படுவீர்கள். சாதகமான நாள்.


விருச்சிகம்


மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தைவழி சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். வியாபார பணிகளில் கூட்டாளிகளின் ஆதரவு கிடைக்கும். தாமதம் குறையும் நாள்.


தனுசு


வியாபாரத்தில் இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சாதகமான சூழல் அமையும். அரசு சார்ந்த செயல்பாடுகளில் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.


மகரம்


சுபகாரியம் தொடர்பான முயற்சிகளில் இருந்துவந்த பிரச்சனைகள் நீங்கும். குழந்தைகளின் வழியில் ஒத்துழைப்பும், மகிழ்ச்சியும் ஏற்படும். விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை செய்து முடிப்பீர்கள். வியாபார பணிகளில் மேன்மையான சூழல் ஏற்படும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். ஆடம்பர பொருட்களின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கவலைகள் குறையும் நாள்.


கும்பம்


பொன், பொருள் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் மேம்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உறவினர்களிடத்தில் உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கும். தனவரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.


மீனம்


வியாபார பணிகளில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து செயல்படவும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் சூழ்நிலைகளை அறிந்து சிந்தித்து செயல்படவும். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மாற்றமான வாய்ப்புகள் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.