நாள் - 21.08.2023 - திங்கள்


நல்ல நேரம்:


காலை 09.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 04.45 மணி முதல் மாலை 05.45 மணி வரை


இராகு:


காலை 7.30 மணி முதல் காலை 09.00 மணி வரை


குளிகை:


நண்பகல் 01.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை


எமகண்டம்:


காலை 10.30 மணி முதல் காலை 12.00 மணி வரை


இன்றைய ராசிபலன்


மேஷம்


மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். உத்தியோக பணிகளில் உயர்வு உண்டாகும். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த இழுபறியான சூழல் குறையும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலகிச் சென்றவர்களை பற்றிய சிந்தனைகள் மேம்படும். மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.


ரிஷபம்


உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மனம் மகிழ்வீர்கள். உலகியல் நிகழ்வுகளின் மூலம் மனதளவில் மாற்றம் பிறக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். வரவுகள் மேம்படும் நாள்.



மிதுனம்


உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். ஒப்பந்த பணிகளில் இழுபறிகள் மறையும். உத்தியோக பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளுக்கு தெளிவு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டி, பொறாமைகள் விலகும். நன்மை மேம்படும் நாள்.


கடகம்


பாகப்பிரிவினை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பினை மேம்படுத்துவீர்கள். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதளவில் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள்.  உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உதவிகள் மேம்படும் நாள்.


சிம்மம்


வியாபாரம் நிமிர்த்தமான ஆலோசனைகள் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோகம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். செலவுகள் நிறைந்த நாள்.


கன்னி


பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும். தொழில் சார்ந்த முதலீடுகளில் கவனம் வேண்டும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். தனிப்பட்ட கருத்துகள் கூறும் போது நபர்களின் தன்மைகளை அறிந்து செயல்படவும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். ஆதாயம் நிறைந்த நாள்.


துலாம்


எதிர்பாராத செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். புதிய முடிவுகளை எடுக்கும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கப் பெறுவீர்கள். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றம் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்து கொள்ளவும். நேர்மை வெளிப்படும் நாள்.


விருச்சிகம்


நீண்ட நாள் வைப்பு திட்டங்கள் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். பெருந்தன்மையுடன் செயல்பட்டு பலரின் நம்பிக்கையை பெறுவீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தெளிவு பிறக்கும் நாள்.


தனுசு


புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உறவினர்களை பற்றிய புரிதல் உண்டாகும். உத்தியோக பணிகளில் ஆர்வமின்மையான சூழல் ஏற்படும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தந்தை வழி உறவுகளால் ஆதாயம் அடைவீர்கள். வாகனங்களில் உள்ள பழுதுகளை சீர் செய்வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.


மகரம்


ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் அமையும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய வீடு வாங்குவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாமதம் குறையும் நாள்.


கும்பம்


எளிதில் முடிய வேண்டிய சில காரியங்கள் தாமதமாக நிறைவுபெறும். புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த துறைகளில் சிந்தித்துச் செயல்படவும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


மீனம்


வியாபாரம் தொடர்பாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். இழுபறியான விஷயங்களுக்கு திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதிய அறிமுகம் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.