நாள்: 20.05.2023 - சனிக்கிழமை 


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை 


சூலம் - கிழக்கு


மேஷம்


புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலைகள் உண்டாகும். கணிதம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். தனவருவாயில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பாராட்டுகள் நிறைந்த நாள்.


ரிஷபம்


எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். இனம்புரியாத சில விஷயங்களின் மூலம் செயல்பாடுகளில் சோர்வு உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். பணிபுரியும் இடத்தில் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். பாகப்பிரிவினை தொடர்பான செயல்களில் விவேகம் வேண்டும். தந்திரமான சில விஷயங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். சலனம் நிறைந்த நாள்.


மிதுனம்


குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்து செல்வதன் மூலம் ஒற்றுமை அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் பொறுமையை கடைபிடிக்கவும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். எதிர்பாராத பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் இழுபறியாகி முடிவு பெறும். உற்சாகம் நிறைந்த நாள்.


கடகம்


சக ஊழியர்களால் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கும். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். எண்ணிய எண்ணங்களை செயல்படுத்தி முடிப்பீர்கள். வர்த்தகம் சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மனதில் இருக்கும் பலவிதமான குழப்பங்களுக்கு தெளிவு ஏற்படும். உயர் அதிகாரிகளின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் அமையும். நன்மை நிறைந்த நாள்.


சிம்மம்


மனதிற்கு விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அரசு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். வாக்குறுதிகளை அளிக்கும் போது சிந்தித்து செயல்படவும். வெளியூர் தொடர்பான பொருட்களின் மூலம் ஆதாயம் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தமான சூழ்நிலைகள் மறையும். சுபகாரியம் தொடர்பான பயணங்கள் கைகூடும். குழப்பம் நிறைந்த நாள்.


கன்னி


செயல்பாடுகளில் லாபகரமான கண்ணோட்டம் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நண்பர்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். நேர்மைக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.


துலாம்


உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். இனம்புரியாத ஒருவிதமான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கற்பித்தல் பணிகளில் சில மாற்றமான சூழல் நிலவும். சமூக பணிகளில் இருப்பவர்கள் பொறுமையுடன் செயல்படவும். பூர்வீக சொத்துக்களில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். முயற்சிகள் வேண்டிய நாள்.


விருச்சிகம்


வாழ்க்கைத் துணைவருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும்.  போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முதலீடுகள் மேம்படும். எதிர்ப்புகள் விலகும் நாள்.


தனுசு


பணிபுரியும் இடத்தில் அனுசரித்து செல்லவும். மற்றவர்களிடம் எதிர்பார்த்திருந்த சில உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தோன்றும் சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பாக்கிகள் கிடைக்கும். வழக்கு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த தாமதங்கள் குறையும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பெருமை நிறைந்த நாள்.


மகரம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதிய கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். ரசனையில் புதுவிதமான மாற்றம் உண்டாகும். திறமைகள் வெளிப்படும் நாள்.


கும்பம்


கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். பயணங்களின் மூலம் அனுகூலம் பிறக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.


மீனம்


விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். இளைய உடன்பிறப்புகளின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் குறைவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். இணையம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சிறு தொழில் புரிபவர்களுக்கு மேன்மையான வாய்ப்புகள் அமையும். நிறைவு நிறைந்த நாள்.