இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 06, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைக்கு கன்னியில் சந்திரன் சென்று கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்...
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பண வரவு அதிகரிக்கும் நாள். உற்றார் உறவினர்களின் ஆதரவால் காரிய சித்தி உண்டாகும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். வேலையில் உத்தியோகஸ்தர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நிதானமாக செயல்பட வேண்டிய நாள். . உங்களின் வேகத்திற்கு மற்றவர்கள் ஈடு கொடுக்க முடியாது. பொறுமையாக சம்பவங்களை கையாளுங்கள் வெற்றி உங்களைத் தேடி வருகிறது. என்ன விமர்சித்தாலும் இறுதியில் உங்களின் வாதமே வெல்லும். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தற்போது 4ல் சுக்கிரனைச் பயணித்துக் கொண்டிருக்கிறார் கவனமாக இருங்கள் அடுத்தவர்களுக்கு நீங்கள் உதவி செய்யப் போய் அது ஒரு வேலை உங்களுக்கு உபத்திரமாக கூட முடியலாம். சரியான வழிகாட்டுதல் தற்போது உங்களுக்கு தேவைப்படுகிறது. தொந்தரவு செய்யும் அவர்களிடம் இருந்து சற்று தள்ளி இருங்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு கடந்த ஒரு வாரமாக நீங்கள் எடுத்து வைக்கும் எந்த காரியமும் சரியாக போகவில்லை என்று மன சஞ்சலத்தோடு இருக்கலாம் கவலை வேண்டாம் வருங்காலம் வசந்தமாகும் நண்பர்களின் ஆதரவோடு சில காரியங்களை முடிப்பீர்கள் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ள வேண்டி வரும் கடுமையாக உழைக்கும் நாள்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே சுற்றி இருப்பவர்களை இனம் கண்டுபிடித்து அதற்கு ஏற்றார் போல் உங்களை மாற்றிக்கொள்ள ஏற்ற தருணம். ஒரு முறைக்கு இருமுறை காரியங்களை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது புற்று இருப்பவர்களின் ஆலோசனைகளுக்கு கேளுங்கள் உங்களுக்கு பிடித்தவற்றை செயல்படுத்துங்கள். இன்றைய தினத்தில் அமைதியாக செயல்படும் நீங்கள் எதிர்காலத்தில் உங்களின் நிலைப்பற்றி சிந்திப்பீர்கள். சிந்தனை கூடும் நாள்.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி உங்களுடைய ராசிக்கு சந்திரன் போய்க்கொண்டிருக்கிறது காரியங்களில் பெரிதாக அவசரப்பட வேண்டாம் நிதானமாக செயல்படுங்கள் வெற்றி உங்களைத் தேடி வரும். மனம் ஒருவித மகிழ்ச்சியுடன் இருக்கும். அதிகமாக சிரித்து விட்டாலும் சுற்றுகிறது பொறாமை கொள்ளும் அளவிற்கு நிகழ்வுகள் நடக்கலாம் வெற்றி பெறும் நாள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே முயற்சிகளில் வெற்றி பெறும் நாள் தேடிய காரியங்கள் சிறப்பாக அமையும். வாழ்க்கைத் துணை உடன் சிறு விவாதங்கள் வந்து செல்லலாம். கூடிய விரைவில் மௌனம் காக்க வேண்டி வரலாம். உடன் பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சுறுசுறுப்பாக செயல்படும் நாள் எதிரும் வெற்றி பெற்று எதிரிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உற்றார் உறவினர்களால் வீடு களைகட்டும்.. முக்கிய நிகழ்வுகளுக்கு சென்று வருவீர்கள். மற்றவர்கள் உங்களின் ஆலோசனை கேட்பார்கள்.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாள். அனைத்து வேலைகளையும் சுலபமாக முடிக்கக்கூடிய நீங்கள் சற்று போராட வேண்டி வரலாம். வேலையை பொறுத்தவரை குரு உங்களுக்கு சாதகமான நிலையில் பத்தாம் இடத்தை பார்ப்பதால் புதிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். ஒரு தொழிலுக்கு இரண்டு தொழில் பார்க்க வேண்டி வரலாம் வாழ்த்துக்கள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே வேலை பொறுத்தவரை உங்களை ஒன்றும் செய்து விட முடியாது. அடுத்தவர்கள் சிறு சிறு தொந்தரவுகளை கொடுத்து பார்த்தாலும் உங்களை அசைக்க முடியாத இடத்தில் தான் நீங்கள் இருப்பீர்கள். மனம் தைரியம் அதிகம் உள்ள உங்களுக்கு நல்ல காரியங்கள் தேடி வரப் போகிறது. குறிப்பிட்ட நாட்களில் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க வாய்ப்பு உண்டு. நாவடக்கம் வேண்டும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும் குறிப்பாக நீங்கள் செய்கின்ற காரியங்களில் மற்றவர்கள் தலையிடாமல் இருப்பது நல்லது முடிந்தவரை நீங்களே எல்லாவற்றையும் செய்து முடிக்க பாருங்கள். முக்கியமாக யாரையாவது சந்திக்க வேண்டும் என்றால் இரண்டு நாட்களுக்கு தள்ளிப் போடுவது நல்லது.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிரிகளை வெல்லும் நாள். பார்ப்பவர்கள் எல்லாம் நம்பி விடக் கூடிய தன்மை உள்ள நீங்கள் சற்று ஏமாறாமல் இருக்க யாரை நம்பலாம் நம்ப வேண்டாம் என்று சிந்திக்கும் தனமாக இருக்கும். உதவி செய்தவர்கள் முதுகில் குத்தி விட்டார்களே என்ற எண்ணம் இருக்கலாம். கவலை வேண்டாம் வருகின்ற காலங்கள் சிறப்பாக அமையும்.