அன்பார்ந்த வாசகர்களே ஆயில்யம் முடிந்து மகம் நட்சத்திரத்தில் நுழையும் சந்திரன் உங்கள் ராசிக்கு என்ன பலன் என்பதை பார்க்கலாம்...
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today September 01, 2024:
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புகழ் கௌரவம் கூடும் நாள். .குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள் டிஜிட்டல் வழி ஆதாயம் உண்டு. நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்களுக்கு திருப்திகரமாக அமையும். நீங்கள் விரும்பிய காரியத்தை தாராளமாக செய்து முடிப்பீர்கள் 5 ஆம் வீட்டில் சந்திரன் பயணிப்பது உங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்ல வழி வகுக்கும்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே ராசிக்கு 3-ம் வீட்டில் சந்திரன் செல்வதால் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க உகந்த நாள். அன்பை கொடுத்து அன்பை பெற்றுக்கொள்ள ஏற்ற நாள். மற்றவர்களோடு இணக்கமாக பழக வேண்டும் நல்ல முறையில் பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்பும் உங்களுக்கு இந்த நாள் சிறந்தது. மற்றவர்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துங்கள், அன்பைப் பெறுங்கள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான் இருக்கின்ற வேலையை பார்க்கலாமா அல்லது வேறு ஏதேனும் புதிய வேலை தேடலாமா என்ற எண்ணம் தோன்றும் நாள். பணப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும் மனம் திருப்தியாக இருக்க வேண்டும் அல்லவா. தியானம் செய்யுங்கள். ஆன்மீகத்தில் மனம் செல்லும். மற்றவர்களிடம் மனம் விட்டு பேச விரும்புவீர்கள். நண்பருக்கு போன் போட்டு உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள். பரஸ்பரமாக அன்பைப் பரிமாறும் நாள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே ராசிக்குள் சந்திரன் செல்வதால் எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி மேல் வெற்றிதான். நல்ல உணவு உண்ண ஏற்ற நாள். உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசுவார்கள். நண்பர்கள் படை சூழ. மகிழ்ச்சியாக நாளை கழிப்பீர்கள் . யாரும் இல்லை என்றாலும் தனித்து வாழக்கூடிய சிங்கம் தான் நீங்கள். இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் மற்றவர்களை விட நீங்கள் கெட்டிக்காரர்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு இன்று இரவு தொடங்கி சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருங்கள். நீங்கள் செய்யாத தவறுக்கு கூட பொறுப்பேற்க வேண்டி வரலாம். அடுத்தவர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம். நீங்கள் ஒன்றும் சொல்லாமலேயே உங்கள் மீது யாரேனும் பழி போடும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. நல்ல காரியங்களை இரண்டு நாள் தள்ளிப் போடுங்கள்.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே ராசிக்கு 11-ல் சந்திரன் இருப்பதால் உங்களுக்கு பெருமை வந்து சேரும் நாள். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள். உங்களைப் போன்று நன்றாக வேலை செய்யக்கூடியவர் யாருமில்லை என்று பெருமையாக பேசுவார்கள். குடும்பத்தில் உள்ளவர்களோடு நேரம் செலவிடுவதற்கான காலம். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். உதவிகள் உங்களைத் தேடி வரும்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு எதிரிகள் இருந்த இடம் தெரியாமல் போவார்கள். செப்டம்பர் 5 க்குபிறகு சிறப்பாக இருக்கிறது. எதிரிகள் கடல் போல இருந்தாலும் உங்கள் மூளை பலத்திற்கு ஈடாக வேற எதுவும் இல்லை. சற்று இறுக்கமான மனநிலை ஏற்படலாம் காரணம் எட்டில் குரு பகவான் இருக்கிறார். இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆன்மீகத்தில் மனம் செலுத்துங்கள் நிம்மதி அடைவீர்கள்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தொழிலாக வைத்திருப்பவர். பெயர் பெருமை வந்து சேரும். பிள்ளைகளால் ஆதாயம் உண்டு. வீட்டில் சுப காரியங்கள் நடக்க ஏற்ற நாள். கடந்து வந்த பாதையை பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்பீர்கள். . ஏற்கனவே உங்கள் வாழ்வில் இழந்ததை எல்லாம் பற்று நினைப்பீர்கள். கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக அமையும். குடும்பத்தில் சிறு சலசலப்பு இருந்தாலும் அவை ஒன்றும் உங்களை பாதிக்காது.
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தினம் முடியும் வேலையில் ஒரு வழியாக சந்திராஷ்டமம் உங்களுக்கு முடிந்து நிம்மதி பெருமூச்சு விடும் நாள். இரண்டு நாட்களாக உங்களுக்கு இருந்த மன இறுக்கம் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய மகிழ்ச்சியை அடுத்தவர்களுக்கும் பரப்புவீர்கள். நீங்கள் இயல்பாகவே மகிழ்ச்சியான நபர் உங்களுடைய பாசிட்டிவிட்டியை அடுத்தவர்களிடம் கொண்டு செல்லுங்கள் நாள் நிம்மதியாக இருக்கும்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே இன்று மகிழ்ச்சி பொங்கும் நான். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர். உங்களைப் போல் உழைப்பவர்கள் யாருமில்லை என்ற பெயர் எடுத்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் என்ன அழைக்கிறீர்கள் என்பது உங்கள் மேல் இடத்திற்கு தெரியாமல் இருக்கும். நீங்களாகவே சென்று என்ன வேலை செய்கிறீர்கள் என்று தெரியப்படுத்தினால் உங்களுக்கான பலன் வந்து சேரும். உங்களுக்கு வீண் புகழ்ச்சி பிடிக்கவில்லை என்றாலும் உங்களுக்கு புகழ் வந்து சேரும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுக்கு ராசிக்குள் சந்திரன் செல்வதால் முகப்பொலிவு ஏற்படும். தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள். வாழ்க்கையில் எது வேண்டும் எது வேண்டாம் என்று அறிந்தவர் நீங்கள். சில சமயங்களில் உங்களுக்கு தேவையானவற்றை நீங்களாகவே எடுத்துக் கொள்வீர்கள். ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள். ரகசியங்களை எதிரியிடம் சொல்ல வேண்டாம். வெற்றி உங்களைத் தேடி வரும்.
மீன ராசி
அன்பான மீன ராசி வாசகர்களே நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிதான். அனுகூலமான தினம் இன்று. எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி மேல் வெற்றிதான். வாகனத்தில் செல்லும்போது பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். நல்ல உணவு உன்னை ஏற்ற நாள். உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசுவார்கள். நண்பர்கள் படை சூழ. மகிழ்ச்சியாக நாளை கழிப்பீர்கள் . யாரும் இல்லை என்றாலும் தனித்து வாழக்கூடிய சிங்கம் தான் நீங்கள். இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் மற்றவர்களை விட நீங்கள் கெட்டிக்காரர்.