இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 2, 2024: 


 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். போட்டிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நுட்பமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். சவாலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தாமதம் நிறைந்த நாள்.

 

ரிஷப ராசி

 

பயனற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். தனவரவு தாராளமாக இருக்கும். வாகனங்களால் முன்னேற்றம் ஏற்படும். பெரியோர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். லாபம் நிறைந்த நாள்.

 

மிதுன ராசி

 

வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பார்ப்புகளில் இருந்துவந்த தடைகள் விலகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வாகன பிரச்சனைகள் குறையும். வாசனை திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். முயற்சிக்கு உண்டான காரிய அனுகூலம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.

 

 கடக ராசி

 

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். வீடு, மனை விற்பனையில் லாபம் ஏற்படும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் சில ரகசியங்களை புரிந்து கொள்வீர்கள். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை பிறக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

 

 சிம்ம ராசி

 

ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வியாபாரத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளை துரிதத்துடன் செய்து முடிப்பீர்கள். வாக்குறுதி அளிப்பதில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். திடீர் பயணங்களால் மாற்றமான சூழ்நிலை ஏற்படும். தனம் நிறைந்த நாள்.

 

 கன்னி ராசி

 

ஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். துணைவரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். தவறிய சில வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகத்தால் சில மாற்றங்கள் ஏற்படும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். சக ஊழியர்களிடத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

செய்யும் பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். கை, கால்களில் ஒருவிதமான வலிகள் ஏற்பட்டு நீங்கும். பயணங்களால் வீண் அலைச்சல்கள் உண்டாகும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்க்கவும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.

 

விருச்சிக ராசி

 

அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் மாற்றம் உண்டாகும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். ஆராய்ச்சி கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். கடினமான பணிகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். முதலாளி வகையில் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த துறைகளில் மதிப்பு அதிகரிக்கும். பொறுமை வேண்டிய நாள்.

 

தனுசு ராசி

 

செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். உறவுகளின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுபவம் மேம்படும் நாள்.

 

மகர ராசி

 

கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சவாலான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். வியாபார விஷயங்களில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் ஒருவிதமான மந்தம் தோன்றி மறையும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். இழுபறியான சில விஷயங்கள் முடியும். ஆராய்ச்சி பிரிவில் முன்னேற்றம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

கும்ப ராசி

 

குடும்பத்தில் சிறு சிறு ஆரோக்கியமற்ற விவாதங்கள் தோன்றி மறையும். கடன் செயல்களில் பொறுமை வேண்டும். நெருக்கடியான சூழ்நிலை மூலம் வருத்தம் உண்டாகும். வழக்கு செயல்களில் இழுபறியான சூழல் ஏற்படும். வாக்குறுதி கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கால்நடை பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.

 

மீன ராசி

 

உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் ஏற்படும். குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்துச் செல்லவும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். இன்பம் நிறைந்த நாள்.