இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today October 24, 2024: 


 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

அரசு வழியில் இருந்துவந்த தாமதம் விலகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு அதிகரிக்கும். சகோதரர் வகையில் அனுசரித்துச் செல்லவும். ஆர்வம் நிறைந்த நாள்.

 

ரிஷப ராசி

 

மனதில் எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை மேம்படும். வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். தொழிலில் இருந்துவந்த போட்டிகள் விலகும். குறுகிய தூர பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். சிறு மற்றும் குறுந்தொழிலில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அசதி மறையும் நாள்.

 

மிதுன ராசி

 

பொன், பொருள் சேர்க்கை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். முகப்பொலிவு மேம்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வுகள் கிடைக்கும். பாராட்டு நிறைந்த நாள்.

 

 கடக ராசி

 

எதிலும் ஒரு முறைக்கு இருமுறை சிந்தித்துச் செயல்படவும். வேலையாட்களால் அலைச்சல் உண்டாகும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் உண்டாகும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். சூழ்நிலை அறிந்து செயல்படவும். தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.

 

 சிம்ம ராசி

 

உயர் அதிகாரிகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். பிற மொழி பேசும் மக்களால் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரப் போட்டிகளை சமாளிப்பீர்கள். நெருக்கமானவர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். வெற்றி நிறைந்த நாள்.

 

 கன்னி ராசி

 

பூர்வீக சொத்துக்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த  கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழல் ஏற்படும். சமூகப் பணிகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் மூலம் ஆதாயமான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். அரசு பணியில் துரிதம் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்ப பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களின் மீது கவனம் வேண்டும். வியாபார நிமித்தமான பயணம் உண்டாகும். சோதனை நிறைந்த நாள்.

 

விருச்சிக ராசி

 

செயல்பாடுகளில் தன்னம்பிக்கையும், அனுபவமும் வெளிப்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய துறை சார்ந்த தேடல் ஏற்படும். நண்பர்களின் ஒத்துழைப்பு மேம்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மனை சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். விமர்சனங்கள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். அரசு வழியில் நெருக்கடிகள் ஏற்பட்டு நீங்கும். ஆக்கப்பூர்வமான நாள்.

 

தனுசு ராசி

 

சிந்தனைகளில் கவனம் வேண்டும். தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். கணிதத் துறைகளில் விவேகம் வேண்டும். வியாபார முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். பொழுதுபோக்கு விஷயங்களால் விரயம் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். அமைதி வேண்டிய நாள்.

 

மகர ராசி

 

செய்யும் முயற்சிகளுக்கு ஏற்ப முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். வெளியூர் வேலைவாய்ப்புகள் சாதகமாக அமையும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மேன்மை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பழகும் விதங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சிந்தனை மேம்படும் நாள்.

 

கும்ப ராசி

 

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். பணி நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். பரிசு நிறைந்த நாள்.

 

மீன ராசி

 

சேமிப்பு குறித்த சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை ஏற்படும். வியாபாரப் பணிகளில் கூடுதல் லாபங்கள் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.