Rasipalan November 29: கன்னிக்கு கணவன் மனைவி பிரச்னை குறையும்; துலாமுக்கு சாதனை! உங்கள் ராசிபலன்?

Rasi Palan Today, November 29: இன்று கார்த்திகை மாதம் 14ம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.

Continues below advertisement

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 29, 2024: 

 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....

மேஷ ராசி
 
சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். மற்றவர் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படுவீர்கள். தவறிப்போன சில பொருட்களைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். எதிர்பாராத சில அலைச்சல்கள் உண்டாகும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகங்கள் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி அடைவீர்கள். அரசுப் பணிகளில் ஆதரவுகள் மேம்படும். தனம் நிறைந்த நாள்.
 
ரிஷப ராசி
 
நெருக்கமானவர்களிடம் இருந்துவந்த வேறுபாடுகள் குறையும். அரசு சார்ந்த பணிகளில் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். சில புதுமையான விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பற்று,வரவுகள் உயரும். சுகம் நிறைந்த நாள்.
 
மிதுன ராசி
 
பூர்வீக சொத்துக்களில் சில மாற்றம் செய்வீர்கள். மற்றவர்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தம்பதிகளுக்குள் புரிதல் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபார ரீதியான புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
 
 கடக ராசி
 
நண்பர்களின் ஆலோசனைகள் மனதிற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படும். கூட்டாளிகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். நன்மை நிறைந்த நாள்.
 
 சிம்ம ராசி
 
திட்டமிட்ட பணிகள் ஈடேறும். மாணவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். குறுகிய தூரப் பயணங்கள் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். இடமாற்றம் சார்ந்த முயற்சிகள் ஈடேறும். வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். விற்பனை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செலவு நிறைந்த நாள்.
 
 
 கன்னி ராசி
 
கணவன், மனைவி மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவுகள் உண்டாகும். தன வரவுகள் மேம்படும். ஆடை, ஆபரணச் சேர்க்கை உண்டாகும். சிந்தனைப் போக்கில் உற்சாகம் தோன்றும். தம்பதிகளுக்குள் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் லாபகரமான சூழ்நிலை உருவாகும். தோற்றப்பொலிவில் மாற்றங்கள் காணப்படும். குழப்பங்கள் நீங்கி புதிய பாதையும் தெளிவும் ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.
 
 துலாம் ராசி
 
குழப்பமான சிந்தனைகள் மூலம் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படும். பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கடியான சூழ்நிலைகள் ஏற்பட்டு நீங்கும். வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பூர்வீகச் சொத்துக்கள் மூலம் அலைச்சல் உண்டாகும். சாதனை நிறைந்த நாள்.
 
விருச்சிக ராசி
 
உலக நிகழ்வுகள் மூலம் மாற்றம் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உறவினர்களுடன் சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
 
தனுசு ராசி
 
வியாபாரப் பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். தனவரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் மாற்றம் உண்டாகும். சிற்பப் பணிகளில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து கொள்வதற்கான சூழ்நிலைகள் உருவாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். சாந்தம் நிறைந்த நாள்.
 
மகர ராசி
 
வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். உயர் அதிகாரிகள் பற்றிய சில புரிதல்கள் ஏற்படும். சேவைத் துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். உடற்பயிற்சி விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நேர்மைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். குறுந்தொழில் சார்ந்த முயற்சிகள் அதிகரிக்கும். புகழ் நிறைந்த நாள்.
 
கும்ப ராசி
 
வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபார நிலுவை பணிகளைச் செய்து முடிப்பீர்கள். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். குடும்பத்தாரிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இணையம் தொடர்பான துறைகளில் புதிய அறிமுகங்கள் உருவாகும். பக்தி நிறைந்த நாள்.
 
மீன ராசி
 
கொடுக்கல் வாங்கலில் பொறுமை வேண்டும். மனதில் இருக்கக்கூடிய விஷயங்களை வெளிப்படுத்துவதில் சிந்தித்துச் செயல்படவும். தந்தை வழி உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
Continues below advertisement