இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 27, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
நெருக்கமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். பொன், பொருட்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும். போட்டி, பொறாமைகள் குறையும். சுபகாரியப் பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
ரிஷப ராசி
எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் அமையும். அரசால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். திடீர் யோகங்கள் மூலம் மாற்றம் பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.
மிதுன ராசி
மனதளவில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிறமொழி பேசும் மக்களிடம் கவனம் வேண்டும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். ஆடம்பர செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தடைப்பட்ட வரவுகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். கற்பனைத் துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
கடக ராசி
மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். எதிர்பாராத தன வரவுகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பணிகளில் புதுவிதமான சூழல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணம் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உயர்வு நிறைந்த நாள்.
சிம்ம ராசி
உத்தியோகத்தில் சாதகமான சூழல் ஏற்படும். மனதளவில் தைரியம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டாகும். வழக்குகளில் திருப்பங்கள் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.
கன்னி ராசி
பொன், பொருட்கள் சேர்க்கை உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளளவும். ஆடம்பர செலவுகளைத் தவிர்ப்பீர்கள். திட்டமிட்ட சில காரியங்கள் அலைச்சல்களுக்கு பின்பு நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் பிறக்கும். சுய முடிவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.
துலாம் ராசி
மாற்றமான செயல்களால் புதிய பாதைகளை உருவாக்குவீர்கள். செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். வெற்றி நிறைந்த நாள்.
விருச்சிக ராசி
வெளியூர் பயணங்கள் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். கலைப்பணிகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். புதிய நபர்களிடம் பயனற்ற வாதங்களைத் தவிர்க்கவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கடன் நெருக்கடிகள் குறையும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு ராசி
குடும்பத்தில் அமைதியான சூழல் உண்டாகும். மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தவறிய சில பொருட்கள் கிடைக்கும். பயணங்களால் அனுகூலம் ஏற்படும். வாகனம் தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடத்தில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான நற்செய்திகள் கிடைக்கும். பிரயாணம் நிறைந்த நாள்.
மகர ராசி
உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்படும். அரசு அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். புதிய வியாபாரம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் நாட்டம் அதிகரிக்கும். சேவைத் துறைகளில் இருப்போர்க்கு மேன்மை ஏற்படும். பெருமை நிறைந்த நாள்.
கும்ப ராசி
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை பிறக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். இழுபறியான சில வேலைகள் முடிவு பெறும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். அலுவலகத்தில் உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நற்செய்தி கிடைக்கும் நாள்.
மீன ராசி
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். உயர் அதிகாரிகளிடம் அளவுடன் இருக்கவும். சூழ்நிலை அறிந்து விவேகத்துடன் முடிவுகளை எடுக்கவும். அமைதி வேண்டிய நாள்.