இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today November 15, 2024: 


 அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....



மேஷ ராசி

 

குடும்ப உறுப்பினர்களுடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கடன் தொடர்பான நெருக்கடிகள் குறையும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். உறவுகளின் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். பொன், பொருட்கள் பற்றிய எண்ணம் மனதில் மேம்படும். உத்தியோகப் பணிகளில் திறமைகள் வெளிப்படும். ஆதரவு நிறைந்த நாள். 

 

ரிஷப ராசி

 

வரவுக்கு மீறிய செலவுகளால் நெருக்கடிகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் தோன்றி மறையும். திடீர் செலவுகள் மூலம் கையிருப்புகள் குறையும். சிறு சிறு விஷயங்களுக்கு பொறுமையுடன் முடிவெடுக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சமூக நிகழ்வுகளால் புதிய கண்ணோட்டங்கள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.

 

மிதுன ராசி

 

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடன் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் எண்ணங்கள் ஈடேறும். விரும்பியதை வாங்கி மகிழ்வீர்கள். தன வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். தடைகள் குறையும் நாள்.

 

 கடக ராசி

 

நெருக்கமானவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். புதிய முயற்சியால் மாறுபட்ட சூழல் உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். விலகியிருந்தவர்கள் விரும்பி வருவார்கள். மற்றவர்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக செயல்படுவீர்கள். உத்தியோகம் நிமித்தமான சில முடிவுகளை எடுப்பீர்கள். அசதி விலகும் நாள்.

 

 சிம்ம ராசி

 

எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் இருந்துவந்த தடைகள் மறையும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்களை செய்வீர்கள். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். கடினமான சில விசயங்களை புரிந்து கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்பு மூலம் மாற்றம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

 

 கன்னி ராசி

 

நெருக்கமானவர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். பார்வை தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். நிதானமான பேச்சுக்களால் நம்பிக்கை மேம்படும். செயல்பாடுகளில் ஆர்வமின்மையான சூழல் உண்டாகும். பயணம் மூலம் அலைச்சல்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். செலவு நிறைந்த நாள்.

 

 துலாம் ராசி

 

தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். பணிகளில் பொறுப்புகள் மேம்படும். கூட்டாளிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த தன உதவிகள் சாதகமாகும். சுகம் நிறைந்த நாள்.

 

விருச்சிக ராசி

 

பணிபுரியும் இடத்தில் உழைப்புக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். நினைத்த பணிகள் நிறைவேறும். எதிர்பார்த்த தனம் சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடிய மன உறுதி அதிகரிக்கும். வழக்குகளில் சாதகமான சூழல் அமையும். குடும்ப விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். கவலை மறையும் நாள். 

 

தனுசு ராசி

 

வியாபார ரீதியான சிலரின் சந்திப்புகள் மாற்றத்தை உருவாக்கும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவதற்கான வாய்ப்புகள் அமையும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். கால்நடை பணிகளில் லாபம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். வெற்றி கிடைக்கும் நாள்.

 

மகர ராசி

 

உறவினர்களின் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். வழக்குகளில் எதிர்பார்த்த திருப்பம் உண்டாகும். ஆரோக்கிய விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். கடன் உதவிகள் கிடைக்கும். பயணங்களின் மூலம் மாற்றமான அனுபவம் கிடைக்கும். வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மாணவர்களுக்கு மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

 

கும்ப ராசி

 

இழுபறியான வேலைகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசு சம்பந்தமான செயல்பாடுகள் சாதகமாகும். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தன வரவுகள் மேம்படும். செயல்பாடுகளில் ஆளுமை திறன் மேம்படும். பழைய வாகனங்களை சீர் செய்வீர்கள். சுபகாரிய முயற்சிகளில் முன்னேற்றம் உண்டாகும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

 

மீன ராசி

 

கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனைகள் மனதில் மேம்படும். மனை விற்றல், வாங்கலில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். எண்ணங்களில் இருந்துவந்த குழப்பம் விலகி தெளிவு உண்டாகும். வருத்தம் மறையும் நாள்.