நாள்: 02.05.2024 


கிழமை: வியாழன்


நல்ல நேரம்:


காலை 10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


இராகு:


பகல் 1.00 மணி முதல் பகல் பிற்பகல் 3.00 மணி வரை


குளிகை:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


எமகண்டம்:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


சூலம் - தெற்கு


மேஷம்


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் மனம் விட்டு பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். விருப்பமான சில பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உயர் அதிகாரிகள் இடத்தில் நெருக்கம் ஏற்படும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். பொறுமை வேண்டிய நாள்.


ரிஷபம்


செயல்பாடுகளில் துரிதம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய வீடு வாங்குவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.


மிதுனம்


எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் கடன்கள் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் இடத்தில் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். அலுவலகப் பணிகளில் பொறுப்பு மேம்படும். பங்குதாரர்களின் வழியில் சில விரயங்கள் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.


கடகம்


மற்றவர்களை நம்பி செயல்படுவதை தவிர்க்கவும். நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிலும் முன்கோபம் இன்றி செயல்படவும். வாடிக்கையாளர்களிடத்தில் கனிவு வேண்டும். உத்தியோகத்தில் கேலி பேச்சுகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் விவேகத்துடன் செயல்படவும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்


சிக்கலான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனம் வேண்டும். வேலையாட்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். உடல் தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் வளைந்து கொடுத்து செயல்படுவது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.


கன்னி


சில விஷயங்களில் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் உண்டாகும். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.


துலாம்


குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்களை மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். முயற்சி மேம்படும் நாள்.


விருச்சிகம்:


செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் புரிதல் உண்டாகும். வாடிக்கையாளர்களிடத்தில் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.


தனுசு


திட்டமிட்ட பணிகளில் உள்ள தடைகளை வெற்றி கொள்வீர்கள். சகோதரர்கள் உதவியாக இருப்பார்கள்.  பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆசைகள் மேம்படும் நாள்.


மகரம்


கல்வியில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களின் வழியில் சிறு சிறு சங்கடங்கள் தோன்றி மறையும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் மேம்படும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். வரவு நிறைந்த நாள்.


கும்பம்


மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உங்களை பற்றிய விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். உத்தியோகத்தில் மறதியால் சில பிரச்சனைகள் உண்டாகும். கல்வி சார்ந்த பணிகளில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். அமைதி நிறைந்த நாள்.


மீனம்


மனதளவில் எதையும் சமாளிக்கும் பக்குவம் பிறக்கும். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அரசு தொடர்பான விஷயங்களில் இருந்துவந்த காலதாமதம் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் மேம்படும் நாள்.