நாள்: 12.03.2024 - செவ்வாய்கிழமை
நல்ல நேரம்:
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
குளிகை:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
எமகண்டம்:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
திட்டமிட்ட காரியங்களில் அலைச்சல் ஏற்படும். புதுமையான விஷயங்களால் விரயம் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. லாபம் நிறைந்த நாள்.
ரிஷபம்
பேச்சுத் திறமையால் காரிய அனுகூலம் உண்டாகும். உணவு தொடர்பான துறைகளில் லாபம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இலக்கிய துறைகளில் மதிப்பு மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களால் ஆதாயம் அடைவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
மிதுனம்
தொழில் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். அரசு காரியங்களில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். புதிய வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். உறவினர்களின் வருகை உண்டாகும். வாசனை திரவியப் பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். பகை மறையும் நாள்.
கடகம்
நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில பயணங்கள் உண்டாகும். திட்டமிட்ட காரியங்கள் கைகூடிவரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மனதில் புதுவிதமான தேடல் பிறக்கும். உயர் அதிகாரிகளிடத்தில் பொறுமை வேண்டும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். நம்பிக்கை வேண்டிய நாள்.
சிம்மம்
சமூகப் பணிகளில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்பு குறையும். பயனற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். மறதி தொடர்பான பிரச்சனைகளால் செயல்பாடுகளில் தாமதம் உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.
கன்னி
வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். சமூகப் பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். அனுபவம் மேம்படும் நாள்.
துலாம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். ரகசியமான சில செயல்பாடுகளால் ஆதாயம் அடைவீர்கள். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
எதிர்காலம் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கற்பனைத் துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். நண்பர்களின் வழியில் ஆதரவு ஏற்படும். பழைய பிரச்சனைகள் குறித்த சிந்தனை அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகளால் சில மாற்றங்கள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.
தனுசு
புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தநிலை குறையும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனை அதிகரிக்கும். கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை ஏற்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனை கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.
மகரம்
விடாப்பிடியாக செயல்பட்டு நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். பாகப்பிரிவினை சார்ந்த விஷயங்களில் தெளிவு ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் தொடர்பான வர்த்தகத்தில் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். யோகம் நிறைந்த நாள்.
கும்பம்
தனவருவாய் குறித்த எண்ணங்கள் மேம்படும். கனிவான பேச்சுக்களின் மூலம் நன்மதிப்பு உண்டாகும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. பயணங்களால் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை விலகும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.
மீனம்
உறவினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உற்பத்தி துறைகளில் பொறுமை வேண்டும். மனதில் புதுவிதமான சிந்தனை பிறக்கும். எதிலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பயணங்களில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். இன்பம் நிறைந்த நாள்.