நாள்: 15.06.2024 


கிழமை: சனி


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


பயணங்களால் புதுவிதமான அனுபவங்கள் உண்டாகும். எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உடல்நிலையில் தோன்றிய சங்கடங்கள் நீங்கும். வழக்குகளில் சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரிசெய்வீர்கள். பழைய சிக்கல்கள் படிப்படியாக குறையும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். ஊக்கம் நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். வரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்சேர்க்கை உண்டாகும். திட்டமிட்டு செயல்பட்டால் முயற்சியில் வெற்றி கிடைக்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் மேம்படும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். அமைதி நிறைந்த நாள்.


மிதுனம்


தாய் வழியில் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். உடல்நலத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வாகன வசதிகள் மேம்படும். உதவிகள் கிடைக்கும் நாள்.


கடகம்


சிறு தூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். கடினமான விஷயங்களை சாதாரணமாக முடிப்பீர்கள். சொத்து பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் சில முடிவுகளை எடுப்பீர்கள். புதிய எலக்ட்ரானிக்கல் பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.


சிம்மம்


உடனிருப்பவர்கள் கூறும் கருத்துகளில் உண்மையை அறிந்து முடிவெடுப்பது நல்லது. நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். வெளி வட்டாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்களின் வழியில் அலைச்சல் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் உண்டாகும். மறதி நிறைந்த நாள்.  


கன்னி


உத்தியோகத்தில் பொறுப்புகள் மேம்படும். வருமான உயர்வு குறித்த எண்ணங்கள் தோன்றும். பழைய சிந்தனைகளின் மூலம் செயல்களில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். வித்தியாசமான பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் ஏற்படும். தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். நம்பிக்கை மேம்படும் நாள்.


துலாம்


எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வரவு, செலவில் விவேகத்துடன் செயல்படவும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்த்த நன்மை கிடைக்கும். சிந்தனை போக்கில் மாற்றம் உண்டாகும். தெய்வப் பணிகளில் ஈடுபடுவதற்கான சூழல் ஏற்படும். பணி நிமித்தமான பயணங்களில் சாதகமான வாய்ப்புகள் அமையும். பகை மறையும் நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். மேல்நிலைக் கல்வியில் தெளிவு ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். சஞ்சலம் நிறைந்த நாள்.  


தனுசு


மருமகன் வழியில் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்புகள் குறையும். சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பகிர்வதில் கவனத்துடன் இருக்கவும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். அனுபவம் கிடைக்கும் நாள்.


மகரம்


குடும்பத்தில் நிம்மதி உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். வெளியுலக அனுபவங்களால் மாற்றம் பிறக்கும். அலுவலகத்தில் உழைப்புக்கான மதிப்பு கிடைக்கும். புதிய அனுபவங்களால் புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த பணிகள் சாதகமாக முடியும். வரவு நிறைந்த நாள். 


கும்பம்


எதிர்பார்த்திருந்த சில உதவிகள் தாமதமாக கிடைக்கும். மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். எதிலும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து செயல்படவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் அதிக உரிமை எடுத்துக் கொள்வதை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். ஆர்வமின்மையான நாள்.


மீனம்


மனதளவில் இருந்துவந்த தயக்கம் குறையும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த வேலைகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய உற்சாகம் பிறக்கும். வழக்கு விஷயங்களில் திடீர் திருப்பங்கள் உண்டாகும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரம் நிமித்தமான சிந்தனைகள் அதிகரிக்கும். ஆசைகள் பிறக்கும் நாள்.