நாள்: 27.01.2024 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். உறவினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். உத்தியோகத்தில் அலைச்சல் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். இலக்கியப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். உயர் கல்வியில் தெளிவு பிறக்கும். ஆக்கப்பூர்வமான நாள்.


ரிஷபம்


எதிர்காலம் தொடர்பான முடிவுகளில் பொறுமை வேண்டும். பயணங்களால் அலைச்சல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் குறையும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் ஆர்வம் உண்டாகும். நெருங்கியவர்களின் உதவியால் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். மதிப்பு மேம்படும் நாள்.


மிதுனம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். தகவல் தொடர்பு துறையில் ஆதாயம் ஏற்படும். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். தனம் நிறைந்த நாள்.


கடகம்


நெருக்கமானவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சாதகமான முடிவு கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்பு மேம்படும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மறதி குறையும் நாள்.


சிம்மம்


பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். செயல்பாடுகளில் தாமதம் ஏற்படும். பெற்றோர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். அமைதி நிறைந்த நாள்.


கன்னி


தேவைகளை நிறைவேற்றிக் கொள்வீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். இடமாற்றம் சார்ந்த சிந்தனை அதிகரிக்கும். மறைமுக தடைகளை புரிந்து கொள்வீர்கள். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். செயல்பாடுகளில் இருந்துவந்த கட்டுப்பாடுகள் குறையும். உயர் அதிகாரிகளின் எண்ணங்களை புரிந்து செயல்படவும்.  போட்டி நிறைந்த நாள்.


துலாம்


சமூகம் தொடர்பான பணிகளில் ஆர்வம் உண்டாகும். மனதளவில் தெளிவான சிந்தனைகள் பிறக்கும். வியாபாரம் சார்ந்த முயற்சியில் மேன்மை உண்டாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். பயணம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். திறமை வெளிப்படும் நாள்.


விருச்சிகம்:


குடும்பத்தில் ஒத்துழைப்பு உண்டாகும். உங்கள் கருத்துக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். வரவுகளால் சேமிப்பு மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் முன்னேற்றம் உண்டாகும். தொலைதூர பயணங்கள் சாதகமாகும். மேல்நிலைக் கல்வியில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சாஸ்திரம் தொடர்பான விஷயங்களில் தெளிவு ஏற்படும். பகை விலகும் நாள்.


தனுசு


தற்பெருமையான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முன் யோசனையின்றி செயல்படுவதை தவிர்க்கவும். தீர்த்த யாத்திரைகளில் ஆர்வம் ஏற்படும். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் கிடைக்கும். புதிய துறை சார்ந்த தேடல் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.


மகரம்


செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல் உண்டாகும். பங்கு வர்த்தகத்தில் புதிய அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் விவேகம் வேண்டும். நிறைவு நிறைந்த நாள்.


கும்பம்


கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். திறமைகளின் மூலம் முன்னேற்றம் அடைவீர்கள். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்துச் செயல்படவும். வியாபாரப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். கமிஷன் சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தடங்கல் விலகும் நாள்.


மீனம்


தந்தை வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். திருப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். புதிய நபர்களால் சில மாற்றங்கள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். மனதை உருத்திய கவலைகள் குறையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்பு உண்டாகும். ஆரோக்கியம் மேம்படும் நாள்.