நாள்: 17.01.2024 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். சோர்வுகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை அறிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் திருப்தியான சூழல் ஏற்படும். பக்தி மேம்படும் நாள்.


ரிஷபம்


சூழ்நிலை அறிந்து கருத்துக்களை வெளிப்படுத்தவும். சிந்தனைகளில் ஒருவிதமான தடுமாற்றம் ஏற்படும். தம்பதிகளுக்குள் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். வரவுகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும்.   வேலையாட்களால் அலைச்சல் ஏற்படும். சக ஊழியர்களிடத்தில் பொறுமை வேண்டும். பெருமை நிறைந்த நாள்.


மிதுனம்


அவசரமான முடிவுகளை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். எதிர்மறை சிந்தனைகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் ஆலோசனை வேண்டும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சக ஊழியர்களிடத்தில் விவாதங்களை தவிர்க்கவும். சுகம் நிறைந்த நாள்.


கடகம்


சாமர்த்தியமாக சில பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வேலையாட்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர் அதிகாரிகளிடத்தில் மதிப்பு மேம்படும். வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.


சிம்மம்


சமூகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். வீடு மற்றும் வாகனங்களை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் லாபம் மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். சமூக நிகழ்வுகளால் மனதளவில் மாற்றம் ஏற்படும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். குழந்தைகள் பொறுப்பறிந்து செயல்படுவார்கள். அனுபவம் மேம்படும் நாள்.


கன்னி


கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் தடைபட்ட பணிகள் முடியும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். புண்ணிய ஸ்தல பயணங்கள் கைகூடிவரும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். மறதி விலகும் நாள்.


துலாம்


நினைத்த சில பணிகளில் அலைச்சல் ஏற்படும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். உடனிருப்பவர்களிடத்தில் அளவுடன் இருப்பது நல்லது. எதிலும் பொறுமையுடன் செயல்படவும். கடன் சார்ந்த விஷயங்களை தவிர்க்கவும். கால்நடை பணிகளில் விவேகம் வேண்டும். போட்டிகள் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் புதிய அறிமுகம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்துவந்த தடைகள் விலகும். வரவு நிறைந்த நாள்.


தனுசு


சில தனவரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். அரசு சார்ந்த விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். வழக்குகளில் சாதகமான முடிவு கிடைக்கும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்களை செய்வீர்கள். பணி நிமிர்த்தமான முயற்சிகள் சாதகமாகும். நினைத்ததை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். சுகம் நிறைந்த நாள்.


மகரம்


மனதளவில் புதிய சிந்தனை உண்டாகும். குழந்தைகளின் தனித்தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். எதிர்ப்பு விலகும் நாள்.


கும்பம்


செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் விலகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். தாய்வழி உறவுகளால் ஒத்துழைப்பு ஏற்படும். நெருக்கடிகளை சமாளிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்பு கிடைக்கும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். தேர்ச்சி நிறைந்த நாள்.


மீனம்


பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உயர் அதிகாரிகளிடம் நெருக்கம் ஏற்படும். வாகனப் பழுதுகளை சீர் செய்வீர்கள். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிந்துகொள்வீர்கள். மனதில் புதிய தன்னம்பிக்கை உண்டாகும். அரசு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். அனுகூலம் நிறைந்த நாள்.