இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December , 2024: 


அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்...


மேஷம்


உத்தியோகத்தில் நிர்வாகத் திறமை வெளிப்படும். எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். மனைவியுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். கூட்டாளிகள் வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். எந்தவொரு காரியத்திலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.


ரிஷபம்


வியாபார பயணங்களில் புதுமையான சூழல் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சமூகப் பணிகளில் பொறுப்புணர்ந்து செயல்படவும். வாசனைப் பொருட்கள் மீதான ஆர்வம் ஏற்படும். எண்ணியதை வெளிப்படுத்துவதில் சிந்தித்து செயல்படவும். வெளியூர் பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். உடன் இருப்பவர்கள் மூலம் மாறுபட்ட அனுபவங்கள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


மிதுனம்


சாமர்த்தியமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். ரசனைத் தன்மையில் மாற்றம் ஏற்படும். திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்துக் கொள்ளவும். உடன்பிறந்தவர்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடி வரும். விருத்தி நிறைந்த நாள்.


கடகம்


எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாக அமையும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். பணி நிமித்தமான புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பேச்சுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். எதிலும் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். குழந்தைகள் வழியில் அனுகூலம் உண்டாகும். கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


சிம்மம்


மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். இணையத் துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். புதிய விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். உயர்வு நிறைந்த நாள்.


கன்னி


சுபகாரியங்கள் தொடர்பான சுபவிரயங்கள் உண்டாகும். வெளிவட்டாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். பயணங்களில் முன்னேற்றம் காணப்படும். சமூகப் பணியில் அலைச்சல் அதிகரிக்கும். எதிலும் தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். கடன் தொடர்பான பிரச்சனைகளுக்கு முடிவுகள் பிறக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்ப்பது நல்லது. முயற்சி மேம்படும் நாள்.



துலாம்


புதிய பொருட்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். மனதில் தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். தாய்வழி உறவினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்து செல்வது நல்லது. இறை வழிபாட்டு காரியங்களில் ஈடுபாடுகள் உண்டாகும். ஆபரணங்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்கும். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். யோகம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். விலகிச் சென்றவர்களை பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். மனதில் புதுவிதமான தன்னம்பிக்கை உருவாகும். தூரதேச பயணங்கள் ஈடேறும். அரசு வழியில் மறைமுகமான ஒத்துழைப்புகள் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.


தனுசு


ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். உயர்கல்வி தொடர்பான செயல்பாடுகளில் தெளிவுகள் பிறக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபார பணிகளில் பொறுமை வேண்டும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுதல்களை பெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த வேறுபாடுகள் நீங்கும். கீர்த்தி நிறைந்த நாள்.


மகரம்


சிந்தனை போக்கில் கவனம் வேண்டும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். அஞ்ஞான சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். பயணங்கள் தொடர்பான செயல்களில் காலதாமதம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.


கும்பம்


கணவன், மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடி வரும். உயர் அதிகாரிகள் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். வெளியூர் பயணத்தில் சிந்தித்துச் செயல்படவும். கூட்டு வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வர்த்தக பணிகளில் சாதகமான சூழல் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். நட்பு நிறைந்த நாள்.


மீனம்


வழக்குகளில் பொறுமையுடன் செயல்படவும். மாணவர்களுக்கு மறதி இன்னல்கள் குறையும். பணி பொறுப்புகளால் நேரம் தவறி உண்பீர்கள். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். திடீர் செய்திகள் மூலம் அலைச்சல் ஏற்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.