இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 22, 2024:
இன்றைய தினத்தில் சந்திரன் ரேவதி நட்சத்திரத்தில் பிரயாணம் செய்வதால் உங்கள் ராசிக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பதை பார்க்கலாம் .
மேஷ ராசி :
எதிரிகளை துவம்சம் செய்து அவர்களை இல்லாமல் செய்யப் போகிறீர்கள் . தேவையான உபயோகப் பொருட்களை வாங்கி மகிழும் நாள் . சுபச் செலவுகள் ஏற்படலாம் .
ரிஷப ராசி :
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று பேசக்கூடிய நாள் . ஆழமான கருத்துக்களை எதிர் வைக்கும் போது நீங்கள் வாக்குவாதத்தில் சிக்கலாம் . போட்டிகளில் வெற்றி பெறக்கூடிய நபராக இன்று விளங்குவீர்கள் .
மிதுன ராசி :
வாழ்க்கையில் அடுத்த கட்ட நகர்வுக்கான ஏற்பாடுகளை முன்னின்று செய்வீர்கள் . உங்களைப் பற்றி தரக்குறைவாக பேசியவர்களுக்கு முன்பாக தலை நிமிர்ந்து இருக்கக்கூடிய நாள் . பக்தியில் மனம் செல்லும் . ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் .
கடக ராசி :
திருமண பேச்சு வார்த்தைகள் சமூகமாக முடியும் நாள் . நண்பர்களுடன் இருந்த மனக்கசப்புகள் விலகும் . எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியாக அமையும் . போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள் . நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளலாம் .
சிம்ம ராசி :
சந்திராஷ்டமம் முடிவடையும் தருவாயில் இருப்பதால் சற்று கவனமாக இருக்கவும் . நீங்கள் அமைதியாக இருந்தாலும் மற்றவர்கள் உங்களை தேடி வந்து பேசுவார்கள் . வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகளில் கவனம் தேவை . மதியம் வரை சுமாரான பழங்களும் மதியத்திற்கு மேல் நிறைவான பலன்களும் நடைபெறும் .
கன்னி ராசி :
புகழ் உண்டாகப் போகும் நாள். நீங்கள் செய்யும் காரியங்களை குறித்து அடுத்தவர்கள் பெருமையாக பேசுவார்கள் . முகத்திற்கு முன்னால் புகழக்கூடும் . அடுத்தவர்களுக்கு உதவி செய்யும் முன் வருவீர்கள் . பக்தியால் அதை உண்டு .
துலாம் ராசி :
எடுத்த காரியத்தை ஜெயமாக முடிப்பீர்கள் . அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு . நீண்ட நாட்களாக சந்திக்க நினைக்கும் நபரை சந்திப்பீர்கள் . உங்களுடைய வேலையை குறித்து மேலதிகாரிகள் பெருமையாக பேசுவார்கள் .
விருச்சிக ராசி :
உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும் . பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் . பிள்ளைகளுடன் சில மனக்கசப்புகள் ஏற்படலாம் . குலதெய்வத்தை வழிபாடு செய்வது நல்லது .
தனுசு ராசி :
ராசியை பொறுத்தவரை லாபகரமான நாள் . உங்களுக்கு நடக்கக்கூடிய நல்லவர்களையும், கெட்டவைகளையும் அடுத்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நாள் . வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதம் வேண்டாம் . நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்ளலாம் .
மகர ராசி :
ஆனந்தமாய் இருக்கக்கூடிய காலகட்டம் . விலகிச் சென்றவர்கள் திரும்பி வந்து பேசுவார்கள் . யார் உங்களை எதிர்த்தாலும் அவர்களை தைரியமா எதிர்க்கக்கூடிய தன்னம்பிக்கை பிறக்கும் . சமுதாயத்தில் செல்வம் செல்வாக்கு கூடும் .
கும்ப ராசி :
பிள்ளைகள் வழியில் ஆதாயம் உண்டு . வேலையில் அல்லது தொழிலில் திடீர் தன வருவாய் ஏற்படும் . புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் . குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் .
மீன ராசி :
ராசியிலேயே சந்திரன் செல்வதால் சற்று நிதானமாக நடந்து கொள்வது நல்லது . குறிப்பாக மனதில் பட்டதை வெளிப்படையாக பேச முயற்சி செய்வீர்கள் . இருப்பினும் சில சமயங்களில் நீங்கள் பேசாமல் இருப்பது நல்லது . மதியம் வரை அழுத்தமாகவும் மதியத்திற்கு பிறகு சிறப்பாகவும் இருக்கும் .