✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Rasi Palan Today, August 21: விருச்சிகத்துக்கு பிள்ளைகளால் ஆதாயம்; தனுசுக்கு மகிழ்ச்சி: உங்கள் ராசிக்கான பலன்?

ஜோதிட ரத்னா சிம்மம் ஷாம்   |  21 Aug 2024 06:25 AM (IST)

Rasi Palan Today, August 21: ஆகஸ்ட் மாதம் 21ஆம் நாள் புதன் கிழமையான இன்று எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் மற்றும் நல்ல நேரம் குறித்து விரிவாக காணலாம்.

இன்றைய ராசி பலன்

இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 21, 2024:

 
   அன்பார்ந்த  வாசகர்களே  பூரட்டாதி முடிந்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் சந்திரன் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த வேளையில்  உங்கள் ராசிக்கு என்ன பலன்  என்பதை பார்க்கலாம்...
 
  மேஷ ராசி
 
 அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு புகழ் கௌரவம் கூடும் நாள். .  நீங்கள் விரும்பிய காரியத்தை தாராளமாக செய்து முடிப்பீர்கள்  12 ஆம் வீட்டில் சந்திரன் பயணிப்பது  உங்களை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நகர்த்தி செல்ல வழிவகுக்கும்.   நீங்கள் விரும்பும் போகலாம் அல்லது வீட்டிலேயே இருக்கலாம்.   வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க உகந்த நாள்.
 
  ரிஷப ராசி
 
 அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே அன்பை கொடுத்து அன்பை பெற்றுக்கொள்ள ஏற்ற நாள்.   மற்றவர்களோடு இணக்கமாக பழக வேண்டும்  நல்ல முறையில் பெயர் எடுக்க வேண்டும் என்று விரும்பும் உங்களுக்கு இந்த நாள் சிறந்தது  மற்றவர்களிடத்தில் அன்பை வெளிப்படுத்துங்கள் அன்பைப் பெறுங்கள்.   குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும் நாள்  டிஜிட்டல் வழி ஆதாயம் உண்டு.   நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்யும் பொருட்கள் உங்களுக்கு திருப்திகரமாக அமையும். 
 
 
  மிதுன ராசி
 
  அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான் இருக்கின்ற வேலையை பார்க்கலாமா  அல்லது வேறு ஏதேனும் புதிய வேலை தேடலாமா என்ற எண்ணம் தோன்றும் நாள்.  பணப் பற்றாக்குறை ஒருபுறம் இருந்தாலும் மனம் திருப்தியாக இருக்க வேண்டும் அல்லவா.   தியானம் செய்யுங்கள்.   ஆன்மீகத்தில் மனம் செல்லும்.   மற்றவர்களுடன் மனம் விட்டு பேச விரும்புவீர்கள்.   நண்பருக்கு போன் போட்டு  உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள்.   பரஸ்பரமாக அன்பைப் பரிமாறும் நாள்.
 
    கடக ராசி
 
  அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே  ஒரு வழியாக சந்திராஷ்டமம் உங்களுக்கு முடிந்து நிம்மதி பெருமூச்சு விடும் நாள்.  இரண்டு நாட்களாக உங்களுக்கு இருந்த மன இறுக்கம் விலகி மகிழ்ச்சி அடைவீர்கள்.   உங்களுடைய மகிழ்ச்சியை அடுத்தவர்களுக்கும் பரப்புவீர்கள்.   நீங்கள் இயல்பாகவே மகிழ்ச்சியான நபர்  உங்களுடைய பாசிட்டிவிட்டியை  அடுத்தவர்களிடம் கொண்டு செல்லுங்கள் நாள் நிம்மதியாக இருக்கும்.
 
 
    சிம்ம ராசி
 
  அன்பார்ந்த சிம்மராசி வாசகர்களே  உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமாக இருங்கள்.   நீங்கள் செய்யாத தவறுக்கு கூட பொறுப்பேற்க வேண்டி வரலாம்.   அடுத்தவர்களைப் பற்றி எதுவும் பேச வேண்டாம்.   நீங்கள் ஒன்றும் சொல்லாமலேயே உங்கள் மீது யாரேனும் பழி போடும்.   வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.  நல்ல காரியங்களை இரண்டு நாள் தள்ளிப் போடுங்கள்.
 
  கன்னி ராசி
 
  அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுக்கு பெருமை வந்து சேரும் நாள்.   உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.   உங்களைப் போன்று நன்றாக வேலை செய்யக்கூடியவர் யாருமில்லை என்று பெருமையாக பேசுவார்கள்.   குடும்பத்தில் உள்ளவர்களோடு நேரம் செலவிடுவதற்கான காலம்.   கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும்.   உதவிகள் உங்களைத் தேடி வரும்.
 
  துலாம் ராசி
 
 அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  எதிர்ப்பவர்கள் அழியும் நாள். 
  எதிரிகள் கடல் போல இருந்தாலும் உங்கள் மூளை பலத்திற்கு ஈடாக வேறு எதுவும் இல்லை.   சற்று இறுக்கமான மனநிலை ஏற்படலாம் காரணம் எட்டில் குரு பகவான் இருக்கிறார்.   இருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் ஆன்மீகத்தில் மனம் செலுத்துங்கள்  நிம்மதி அடைவீர்கள்.
 
  விருச்சிக ராசி
 
  அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே யார் எதை கேட்டாலும் கர்ணன் போல கொடுக்கும் மனம் உடையவர் நீங்கள்.  தாய் உள்ளம் கொண்டவர்.  மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தொழிலாக வைத்திருப்பவர்.  மற்றவர்களோடு இணக்கமாக செல்லும் நாள்.  பெயர் பெருமை வந்து சேரும்.  பிள்ளைகளால் ஆதாயம் உண்டு.  வீட்டில் சுப காரியங்கள் நடக்க ஏற்ற நாள்.
 
 
  தனுசு ராசி
 
  அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு  அனுகூலமான தினம் இன்று.   எந்த காரியத்தை எடுத்தாலும் வெற்றி மேல் வெற்றிதான்.   வாகனத்தில் செல்லும்போது பெட்ரோல் இருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள்.   நல்ல உணவு  உன்னை ஏற்ற நாள்.   உங்களைப் பற்றி மற்றவர்கள் பெருமையாக பேசுவார்கள்.  நண்பர்கள் படை சூழ.  மகிழ்ச்சியாக நாளை கழிப்பீர்கள் .   யாரும் இல்லை என்றாலும் தனித்து வாழக்கூடிய சிங்கம் தான் நீங்கள்.   இருந்தாலும் வேலை என்று வந்துவிட்டால் மற்றவர்களை விட  நீங்கள் கெட்டிக்காரர்.
 
  மகர ராசி
 
  அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே இன்று மகிழ்ச்சி பொங்கும் நான்.   வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.   குடும்பத்தை மேம்படுத்துவதற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பீர்.   உங்களைப் போல் உழைப்பவர்கள் யாருமில்லை என்ற பெயர் எடுத்திருப்பீர்கள்.   ஆனால் நீங்கள் என்ன உழைக்கிறீர்கள் என்பது உங்கள் மேல் இடத்திற்கு தெரியாமல் இருக்கும்.   நீங்களாகவே சென்று என்ன வேலை செய்கிறீர்கள் என்று தெரியப்படுத்தினால்  உங்களுக்கான பலன் வந்து சேரும்.  உங்களுக்கு வீண் புகழ்ச்சி பிடிக்கவில்லை என்றாலும் உங்களுக்கு புகழ் வந்து சேரும்.
 
  கும்ப ராசி
 
  அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே தற்போது ராசியில் இருந்து சந்திரன் விலகி இருக்கிறார்.   நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் வெற்றிதான்.   கடந்து வந்த பாதையை பற்றி சற்று சிந்தித்துப் பார்ப்பீர்கள். .  ஏற்கனவே உங்கள் வாழ்வில் இழந்ததை எல்லாம் பற்று நினைப்பீர்கள்.   கவலை வேண்டாம் எதிர்காலம் சிறப்பாக அமையும்.   குடும்பத்தில் சிறு சலசலப்பு இருந்தாலும் அவை ஒன்றும் உங்களை பாதிக்காது.
 
  மீன ராசி
 
  அன்பான மீன ராசி வாசகர்களே  உங்களுக்கு ராசிக்குள் சந்திரன் செல்வதால் முகப்பொலிவு ஏற்படும்.   தீர்க்கமான முடிவு எடுப்பீர்கள்.   வாழ்க்கையில் எது வேண்டும் எது வேண்டாம் என்று அறிந்தவர் நீங்கள்.   சில சமயங்களில் உங்களுக்கு தேவையானவற்றை  நீங்களாகவே எடுத்துக் கொள்வீர்கள்.   ராசிக்குள் சந்திரன் செல்வதால் நீங்கள் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.   ரகசியங்களை எதிரியிடம் சொல்ல வேண்டாம்.  வெற்றி உங்களைத் தேடி வரும். 
Published at: 21 Aug 2024 06:25 AM (IST)
Tags: horoscope RasiPalan August rasi palan today Astrology Today Rasipalan RasiPalan Today
  • முகப்பு
  • ஜோதிடம்
  • Rasi Palan Today, August 21: விருச்சிகத்துக்கு பிள்ளைகளால் ஆதாயம்; தனுசுக்கு மகிழ்ச்சி: உங்கள் ராசிக்கான பலன்?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.