இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today August 8, 2024
அன்பான வாசகர்களே ஆகஸ்ட் 8ஆம் தேதி சந்திரன் கன்னி ராசியில் பயணித்துக் கொண்டிருக்கிறார் இந்த சமயத்தில் உங்களுடைய ராசிக்கு என்ன மாதிரியான பலன் என்பதை பார்க்கலாம் …
மேஷ ராசி
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே, உங்களுடைய ராசியில் இருந்து ஆறாம் ராசியில் சந்திரன் பயணிப்பதால் எதிரிகளை வெல்லக் கூடிய சக்தி கிடைக்கும் . குறிப்பாக மறைவான எதிரிகள் யார் என்பதை அறியக்கூடிய நாள் இன்று. சிலருக்கு மனம் அமைதியை நோக்கி செல்லும். பண தேவை அதிகரிக்கும்.
ரிஷப ராசி
அன்பார்ந்த ரிஷப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு உற்சாகம் பிறக்கும் நாள். தன்னம்பிக்கை தைரியம் உண்டாகும். உங்கள் பேச்சுக்கு சமுதாயத்தில் மரியாதை கிடைக்கும். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க கூடிய அளவிற்கு புத்திசாலி சாதுரியத்துடன் நடந்து கொள்வீர்கள்.
மிதுன ராசி
அன்பார்ந்த மிதுன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு நான்காம் இடத்தில் சந்திரன் பயணிக்கிறார் அதுவும் உத்தர நட்சத்திரத்தில். வீட்டில் அமைதியாக அமர நினைத்தாலும் உட்கார முடியாத அளவுக்கு வேலை வலு அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள். மருத்துவத்தின் மூலம் நோய் குணமாகும். உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.
கடக ராசி
அன்பார்ந்த கடக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு பொன்னான நாள். சந்திரன் கன்னி ராசியில் இருப்பது பிள்ளைகள் வழி ஆதாயம் உண்டு. தொழிலில் எட்டிப் லாபம் ஏற்படும். உங்களுக்கு போட்டியாக இருப்பவர்கள் உங்கள் பக்கம் சாய்வார்கள் . தெய்வ வழிபாட்டில் மூலம் இந்த நாளை நீங்கள் சிறப்பாக்கலாம்.
சிம்ம ராசி
அன்பார்ந்த சிம்ம ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சாதகமான நட்சத்திரத்தில் சந்திரன் பயணிப்பதால் தொட்டது தொடங்கும் நினைத்த காரியம் நடைபெறும். இருப்பினும் ராசிக்கு இரண்டில் சந்திரன் செல்வதால் குடும்பத்தாருடன் வீண் விவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.
கன்னி ராசி
அன்பார்ந்த கன்னி ராசி வாசகர்களே உங்களுடைய ராசியில் சந்திரன் செல்வதால் மனம் படபடப்பாக இருக்கும். யாரையும் நம்பி உங்களுடைய ரகசியங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம். மற்றவர்களாக உங்களிடத்தில் தேடி வந்து பேசுவார்கள். பிரிந்த நண்பர்கள் ஒன்று கூடுவார்கள். நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்த நபரை சந்திப்பீர்கள்.
துலாம் ராசி
அன்பார்ந்த துலாம் ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 12 சந்திரன் சூரியன் வீட்டில் அமர்ந்திருப்பதால் சற்று கடினமான வேலைகளையும் சுலபமாக முடிக்கக்கூடும். மற்றவர்கள் உங்களை வம்பு இழுத்தாலும் நீங்கள் எளிதில் வார்த்தைகளை விட வேண்டாம். மனம் மதியத்திற்கு மேல் மகிழ்ச்சியாக இருக்கும். இனம் புரியாத சந்தோஷம் ஏற்படும். துலாமைப் பொறுத்தவரை எதையோ எழுந்தது போல இருந்தாலும் விரைவில் அதை மீட்டு விடுவோம் என்ற நம்பிக்கை துளிர்க்கும்.
விருச்சிக ராசி
அன்பார்ந்த விருச்சிக ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு 11-ல் சந்திரன் வேலை சம்பந்தமாக எந்த ஒரு காரியமும் ஜெயமாகும். அரசு சார்ந்த வேலைகள் எளிதில் முடியும். நீங்கள் எடுக்கும் காரியத்தில் சற்று கவனத்துடன் செயல்படுவது நல்லது. மற்றவர்கள் உங்களுக்கு உதவி செய்தாலும் அதற்கு கைமாறு எதிர்பார்ப்பார்கள். யாரையும் நம்பி எந்த புது வேலையும் ஒப்படைக்க வேண்டாம் .
தனுசு ராசி
அன்பார்ந்த தனுசு ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு தொழிற் ஸ்தானத்தில் சந்திரன் செல்வதால் நிச்சயமாக வேலை கிடைக்கும். புதிய வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்கள் தற்போது அதற்கான நல்ல நேரம் வந்துவிட்டது. நீண்ட நாட்களாக எதுவும் ஒரு நிறுவனத்திற்கு வேலைக்காக அப்ளை செய்ய வேண்டும் என்று இருந்தால் இந்த நாள் சிறந்தது. மொத்தத்தில் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய நாள்.
மகர ராசி
அன்பார்ந்த மகர ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஒன்பதில் சந்திரன் அமர்ந்து பொன்னான விஷயங்களை உங்களுக்கு அள்ளித் தருகிறார். எதையெல்லாம் வாழ்க்கையில் வேண்டாம் மறக்க வேண்டும் என்று நினைத்தீர்களோ அதையெல்லாம் வெற்றிகரமாக முடிக்கும் நாள் உறவினர்களால் இல்லம் மகிழ்ச்சியில் பொங்கும். தந்தையார் வழி உறவினர்களுடன் ஆதாயம் உண்டு. நிலம் இடம் தொடர்பாக நல்ல தகவல்கள் வரும்.
கும்ப ராசி
அன்பார்ந்த கும்ப ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு சந்திராஷ்டமம் செல்வதால் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக மற்றவர்கள் ஏதேனும் சிறிய காரியத்தில் கூறினால் கூட உங்களுக்கு அது பெரிதாக தோன்றலாம். யாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் . எந்த ஒரு புதிய காரியத்தையும் தொடங்க வேண்டாம் இரண்டு நாள் தள்ளி போடுங்கள்.
மீன ராசி
அன்பார்ந்த மீன ராசி வாசகர்களே உங்களுடைய ராசிக்கு ஏழாம் இடத்தில் சந்திரன் செல்வதால் முகப்பொலிவு கூடும் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். புதிய தொழில் முதலீடு போட வேண்டாம் சற்று தள்ளி போடுங்கள். உங்களுடைய ஆலோசனைகளை மற்றவர்கள் கேட்டு நடப்பார்கள் . அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டு .