நாள்: 03.04.2024 - புதன்கிழமை
நல்ல நேரம்:
காலை 9.30 மணி முதல் காலை 10.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
இராகு:
பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளியூர் பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கலைப்பொருட்களின் மீது ஆர்வம் மேம்படும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் மேம்படும் நாள்.
ரிஷபம்
உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். விவசாயப் பணிகளில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். எதிர்பாராத சில தனவரவுகள் உண்டாகும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். ஆன்மிகம் சார்ந்த பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.
மிதுனம்
உடன்பிறந்தவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். தொழில்நுட்ப கருவிகளால் விரயங்கள் உண்டாகும். திட்டமிட்ட பணிகளில் காலதாமதம் ஏற்படும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகளால் மனதில் குழப்பம் உண்டாகும். பகை விலகும் நாள்.
கடகம்
கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மை ஏற்படும். வர்த்தகம் தொடர்பான பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். ஆடை, ஆபரணச்சேர்க்கை ஏற்படும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். உயர் அதிகாரிகளின் அறிமுகம் ஏற்படும். பிரீதி நிறைந்த நாள்.
சிம்மம்
சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அலைச்சல் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். செயல்பாடுகளில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். தற்பெருமையான விஷயங்களை குறைத்துக் கொள்வது நல்லது. சுகம் நிறைந்த நாள்.
கன்னி
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உணவு சம்பந்தப்பட்ட துறைகளில் மதிப்பு மேம்படும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். வியாபார அபிவிருத்திக்கான எண்ணங்கள் மேம்படும். ரகசிய பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.
துலாம்
சமூகப் பணிகளில் புதுமையான சூழல் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். திறமைகளை வெளிப்படுத்தி ஆதாயம் அடைவீர்கள். விருப்பமான விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருந்துவந்த தாமதங்கள் விலகும். கலைத்துறையில் பொறுமையுடன் செயல்படவும். மருமகன் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வரவு நிறைந்த நாள்.
விருச்சிகம்:
அரசு வழியில் எதிர்பார்த்த உதவி சாதகமாகும். உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு மேம்படும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் பிறக்கும். வித்தியாசமான அணுகுமுறைகளால் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உயர்வு நிறைந்த நாள்.
தனுசு
பலதரப்பட்ட சிந்தனைகளால் மனதில் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். தந்தை வழியில் அனுசரித்துச் செல்லவும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். மறதி பிரச்சனைகள் விலகும். நறுமணப் பொருட்களால் ஆதாயம் அடைவீர்கள். புதிய ஆராய்ச்சி தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நட்பு மேம்படும் நாள்.
மகரம்
எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு சாதகமாகும். சிறு தூரப் பயணங்களால் மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். சொத்துப் பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளுவது நல்லது. லாபம் நிறைந்த நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். புதிய விஷயங்கள் கற்பதில் அலைச்சல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருந்துவந்த பொறுப்புகள் படிப்படியாக குறையும். நலம் நிறைந்த நாள்.
மீனம்
கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் புதிய வாய்ப்பு கிடைக்கும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். அன்பு நிறைந்த நாள்.