நாள் -  24.10.2023 (செவ்வாய் கிழமை)


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


பகல் 12.30 மணி முதல் மாலை 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் நண்பகல் 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


சுபகாரிய முயற்சிகள் கைகூடும். சொத்து விற்பனையில் லாபம் ஏற்படும். பங்குதாரர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். நிலுவையில் இருந்துவந்த வரவுகள் கிடைக்கும். பிரபலமானவர்கள் சாதகமாக இருப்பார்கள். தவறிய சில ஆவணங்கள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் உயரும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். போட்டி நிறைந்த நாள்.


ரிஷபம்


திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். உறவுகளின் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். புதிய பொருட்களின் சேர்க்கை உண்டாகும். பெரிய மனிதர்களின் அறிமுகம் ஏற்படும். அலுவலக பணிகளில் ஆதரவான சூழல் அமையும். கால்நடை பணிகளில் ஆதாயம் மேம்படும். வியாபாரப் பயணங்களில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். பொறுமை நிறைந்த நாள்.


மிதுனம்


உடனிருப்பவர்களால் பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களைச் சீர் செய்வீர்கள். பிடிவாதமாகச் செயல்படுவதைக் குறைத்துக் கொள்ளவும். வியாபார இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகளின் மூலம் மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தனிப்பட்ட செயல்களில் தலையிடுவதைத் தவிர்க்கவும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நலம் நிறைந்த நாள்.


கடகம்


மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். உடனிருப்பவர்களிடம் பொறுமை வேண்டும். நினைத்த காரியங்களை முடிப்பதற்கான முயற்சி அதிகரிக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். விலை மதிப்புள்ள பொருட்களில் கவனம் வேண்டும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருக்கவும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உதவி தாமதமாகும் நாள்.


சிம்மம்


நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு மேம்படும். எதிர்பாராத சிலரின் அறிமுகம் உண்டாகும். புதிய தொழில்நுட்பம் சார்ந்த தேடல் அதிகரிக்கும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை விலகும். வியாபாரத்தில் அனுகூலமான வாய்ப்புகள் உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். வாழ்வு நிறைந்த நாள்.


கன்னி


கனிவான பேச்சுக்களால் காரிய அனுகூலம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மத்தியில் மதிப்பு உயரும். அரசு காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். வழக்கு சார்ந்த பணிகளில் சாதகமான சூழல் அமையும். வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். உயர்வு நிறைந்த நாள்.


துலாம்


குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த வேற்றுமை குறையும். பொன், பொருள் சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் ஆர்வம் ஏற்படும். உயர் அதிகாரிகளை பற்றிய புரிதல் மேம்படும். சிறு கடன்களை அடைப்பீர்கள். பேராசை அகலும் நாள்.


விருச்சிகம்


நினைத்த சில பணிகள் தாமதமாக நிறைவுபெறும். உடனிருப்பவர்களின் ஆதரவு கிடைக்கும். கடன் சார்ந்த சிந்தனைகள் உண்டாகும். தாயின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வியாபாரத்தில் முன்னேற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சில வாய்ப்புகள் கிடைக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவை ஏற்படுத்தும். களிப்பு நிறைந்த நாள்.


தனுசு


குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை அறிவீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் ஏற்படும். சொத்து விற்பனையில் லாபகரமான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை அறிவீர்கள். எதிலும் தைரியத்துடன் செயல்படுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.


மகரம்


பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். பொன், பொருள்கள் மீது ஆர்வம் உண்டாகும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகள் அமையும். சாந்தம் நிறைந்த நாள்.


கும்பம்


உறவினர்களின் வழியில் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் மேம்படும். அரசு சார்ந்த செயல்களில் ஆலோசனைகளை பெற்று முடிவு எடுக்கவும். உத்தியோகத்தில் விமர்சனங்கள் தோன்றி மறையும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். பேச்சுக்களில் கனிவு வேண்டும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.


மீனம்


குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் திருப்தியான சூழல் ஏற்படும். தொழில் மாற்றம் சார்ந்த முயற்சிகள் உண்டாகும். ஆடம்பரமான செலவுகளால் சேமிப்பு குறையும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை வேண்டும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்பு உண்டாகும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். இரக்கம் வேண்டிய நாள்.