நாள் - 06.12.2023 - புதன் கிழமை
நல்ல நேரம்:
காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை
மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை
இராகு:
நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை
குளிகை:
காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை
எமகண்டம்:
காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை
சூலம் - வடக்கு
மேஷம்
மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். திடீர் தனவரவுகள் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் அலைச்சல்கள் இருந்தாலும் லாபமும், அனுபவமும் கிடைக்கும். எதிர்பார்த்த சில உதவிகளால் நெருக்கடிகள் குறையும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். லாபம் நிறைந்த நாள்.
ரிஷபம்
கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு மறைமுகமாக கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். வழக்கு பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.
மிதுனம்
கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபாரப் பணிகளில் இருந்துவந்த இழுபறிகள் மற்றும் பாக்கிகள் வசூலாகும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத தனவரவுகள் உண்டாகும். விவசாயம் சார்ந்த பணிகளில் மேன்மை ஏற்படும். எதிலும் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக முடிவெடுப்பது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.
கடகம்
மாணவர்களுக்கு கல்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்குத் திருப்தியை ஏற்படுத்தும். தைரியமான செயல்பாடுகளின் மூலம் மதிப்பு மேம்படும். கலைப் பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த விமர்சனங்கள் குறையும். சகோதரர் உறவுகளின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
சிம்மம்
வாகன வசதிகள் மேம்படும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். மகிழ்ச்சியான பழைய நினைவுகள் அவ்வப்போது ஏற்பட்டு நீங்கும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் அடைவீர்கள். நட்பு நிறைந்த நாள்.
கன்னி
கூட்டு வியாபாரப் பணிகளில் நிதானத்துடன் செயல்படுவது அவசியமாகும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். பயணங்கள் தொடர்பான விஷயங்களில் புதுவிதமான அனுபவம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவும், புரிதலும் உண்டாகும். ஆதரவு மேம்படும் நாள்.
துலாம்
நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபர்களைச் சந்திப்பீர்கள். சில பணிகளைச் செய்து முடிப்பதில் வேகத்தைவிட நிதானம் வேண்டும். மற்றவர்களுக்கு உதவும் பொழுது சிந்தித்துச் செயல்படவும். தேவையற்ற செலவுகளைத் தவிர்ப்பதன் மூலம் நெருக்கடிகளைக் குறைக்க இயலும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சலும், அனுபவமும் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சலனம் நிறைந்த நாள்.
விருச்சிகம்:
பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை குறையும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் புதிய நம்பிக்கையும், தெளிவும் ஏற்படும். எதிராகச் செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.
தனுசு
வியாபாரப் பணிகளில் இருந்துவந்த மந்தநிலை படிப்படியாகக் குறையும். இரவு நேர பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். அரசு சார்ந்த உதவிகள் சிலருக்குச் சாதகமான பலன்களை ஏற்படுத்தும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பிறமொழி பேசும் மக்களின் ஆதரவு கிடைக்கும். மாற்றம் நிறைந்த நாள்.
மகரம்
சகோதரர்களின் வகையில் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். சுபகாரியங்கள் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
கும்பம்
பத்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். மற்றவர்கள் பற்றி கருத்துகளைக் கூறும் போது சிந்தித்துச் செயல்படவும். வாகனப் பயணங்களின் போது நிதானம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலை அறிந்து கருத்துகளைத் தெரிவிக்கவும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
மீனம்
நண்பர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். வாழ்க்கைத் துணைவரின் வழியில் ஆதாயம் ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆராய்ச்சி சார்ந்த பணிகளில் நுணுக்கமான சில விஷயங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.