நாள்: 29.12.2023 - வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00  மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பொறுமை வேண்டும். உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதரவு ஏற்படும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். அசதியும், சோர்வும் அவ்வப்போது தோன்றி மறையும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தெளிவு நிறைந்த நாள்.


ரிஷபம்


மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த சில ஒப்பந்தம் சாதகமாகும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். உத்தியோகத்தில் முன்னுரிமை கிடைக்கும். திட்டமிட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். புதிய தொழில்நுட்ப கருவிகள் மீதான தேடல் அதிகரிக்கும். கவனம் வேண்டிய நாள்.


மிதுனம்


மனதில் தெளிவு ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் அலைச்சல்களுக்கு பின்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு வேண்டும். தந்திரமான சில செயல்களால் வியாபாரத்தில் லாபத்தை மேம்படுத்துவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.


கடகம்


பழைய சிந்தனைகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மற்றவர்களின் குறைகளை கனிவாக சுட்டிக்காட்டவும். கணவன், மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நண்பர்களின் சந்திப்பு ஏற்படும். உறவினர்களின் வழியில் ஆதரவின்மை உண்டாகும். வாடிக்கையாளர்களின் எண்ணிங்களை புரிந்து செயல்படவும். புதிய முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும். அசதிகள் விலகும் நாள்.


சிம்மம்


நெருக்கமானவர்களிடம் தேவையற்ற வேறுபாடுகள் தோன்றி மறையும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இறை வழிபாட்டில் ஈடுபாடு உண்டாகும். பிறமொழி பேசும் மக்களால் புதிய அனுபவம் ஏற்படும். பயனற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளவும். திடீர் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் திறமைகள் வெளிப்படும். பரிவு வேண்டிய நாள்.


கன்னி


பொதுக்காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். வியாபார இடமாற்றம் சார்ந்த சிந்தனை உண்டாகும். உத்தியோகத்தில் மதிப்பு அதிகரிக்கும். பெருந்தன்மையான செயல்பாடுகளால் ஆதரவு மேம்படும். பாசம் வேண்டிய நாள்.


துலாம்


எதிலும் தன்னம்பிக்கையோடு செயல்படுவீர்கள். உழைப்பிற்கான மதிப்பு கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் பொறுமை வேண்டும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நலம் நிறைந்த நாள்.


விருச்சிகம்:


பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வாக்குறுதிகள் அளிப்பதில் கவனம் வேண்டும். உத்தியோகப்  பணிகளில் பொறுமை அவசியம். கணவன், மனைவிக்கிடையே புரிதல் ஏற்படும். விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சில பிரச்சனைகளை தவிர்க்கலாம். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.


தனுசு


பேச்சுக்களில் நிதானம் வேண்டும். பிறமொழி பேசும் மக்கள் பற்றிய புரிதல் ஏற்படும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் செயல்படுவது நல்லது. உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். உதவி செய்யும்பொழுது கவனம் வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.


மகரம்


மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பலம் மற்றும் பலவீனங்களை அறிவீர்கள். தோற்றப்பொலிவில் சில மாற்றங்கள் உண்டாகும். புதிய வேலை சார்ந்த வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.


கும்பம்


எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். தொழில் ரீதியான சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி தெளிவு பிறக்கும். பணவரவு மத்தியமாக இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பக்தி நிறைந்த நாள்.


மீனம்


முயற்சிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மதிப்பு மேம்படும். தந்தை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் லாபம் மத்தியமாக இருக்கும். தெய்வப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் சிறு குழப்பம் தோன்றி மறையும். மறதி குறையும் நாள்.