நாள் - 16.12.2023 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


புதிய தொழில்நுட்பம் சார்ந்த பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். புதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்டகரமான வாய்ப்புகளின் மூலம் நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் உண்டாகும். இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். காது தொடர்பான உபாதைகள் அகலும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே நெருக்கமும், புரிதலும் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.


மிதுனம்


எதிலும் முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். நீண்ட நேரம் கண் விழிப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். வெளி உணவுகளை குறைத்து கொள்வது நல்லது. வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். நண்பர்களிடத்தில் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நிதானம் வேண்டிய நாள்.


கடகம்


மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். தவறிப்போன சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவரின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் குறையும். நீண்ட நாள் நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வியாபாரப் பணிகளில் மேன்மை உண்டாகும். பெருமை நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபாரப் பணிகளில் ஒத்துழைப்பு மேம்படும். கால்நடைகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் அனுகூலமான சூழல் அமையும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். சமூகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். அன்பு நிறைந்த நாள்.


கன்னி


உயர்பொறுப்பில் இருப்பவர்களின் எண்ணங்களை அறிவீர்கள். மேல்நிலை கல்வியில் தெளிவு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அனுபவமான பேச்சுகளின் மூலம் பிரச்சனைகளுக்கு முடிவு உண்டாகும். இணையம் சார்ந்த துறைகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். ஆர்வம் நிறைந்த நாள்.


துலாம்


வியாபாரப் பணிகளில் சில மாற்றங்கள் செய்வீர்கள். பழக்கவழக்கங்களில் மாற்றம் உண்டாகும். மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்படும். விவசாயப் பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். எதிர் பாலின மக்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். வழக்கு விஷயங்களில் திருப்பங்கள் ஏற்படும். சக ஊழியர்களால் திருப்தியான சூழல் அமையும்.  தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். சோதனை குறையும் நாள்.


விருச்சிகம்:


திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். துணைவர் வழியில் மதிப்பு மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள்.  மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளின் மூலம் பழைய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சிரமம் விலகும் நாள்.


தனுசு


உடனிருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலைகள் ஏற்படும். தடைபட்ட சில வரவுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மந்தமான சூழ்நிலைகள் உண்டாகும். கடன் தொடர்பான இன்னல்கள் குறையும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் அமையும். நன்மை நிறைந்த நாள்.


மகரம்


வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். நபர்களின் தன்மைகளை அறிந்து கருத்துகளை வெளிப்படுத்தவும். நெருக்கமானவர்களிடத்தில் மனம் விட்டுப் பேசுவதன் மூலம் தெளிவு ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்க வேண்டும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பங்கள் உண்டாகும். குறுகிய தூர பயணங்களினால் மாற்றம் ஏற்படும். சுபம் நிறைந்த நாள்.


கும்பம்


போட்டிகளில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் ஆர்வமின்மை உண்டாகும். வியாபாரப் பணிகளில் கவனத்துடன் செயல்படவும். திடீர் பொருள் வரவுகள் சிலருக்கு உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத பயணங்கள் செல்வீர்கள். கவலைகள் விலகும் நாள்.


மீனம்


மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைக்கும். மனதை உருத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். எதிர்பாராத சில பயணத்தின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். துணிச்சல் நிறைந்த நாள்.