நாள் - 07.10.2023 - சனிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


குளிகை:


காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை


எமகண்டம்:


பகல் 1.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். குறுந்தொழில் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். பாகப்பிரிவினை தொடர்பான பிரச்சனைகளுக்கு தெளிவு உண்டாகும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகள் மீது ஆர்வம் ஏற்படும். ஒப்பந்தப் பணிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.


ரிஷபம்


குடும்பத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வரவேண்டிய வரவுகள் கிடைக்கும். முகத்தில் பொலிவு மேம்படும். பழைய பிரச்சனைகளுக்கு புதிய தீர்வு கிடைக்கும். புதியவர்கள் நண்பர்களாக மாறுவார்கள். வியாபாரம் நிமிர்த்தமான நுட்பங்களை அறிவீர்கள். உழைப்பிற்கு உண்டான மதிப்பு கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.


மிதுனம்


உடனிருப்பவர்களை பற்றிய புரிதல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். உடல் ஆரோக்கியம் பற்றிய ஆலோசனைகள் கிடைக்கும். சிந்தனையில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். பரிவு நிறைந்த நாள்.


கடகம்


நினைத்த சில பணிகளை முடிப்பதில் காலதாமதம் உண்டாகும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். ரகசியமான சில முதலீடுகள் மேம்படும். திடீர் பொறுப்புகளால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். மறைமுகமான போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்வதைத் தவிர்க்கவும். உத்தியோகத்தில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். அசதி குறையும் நாள்.


சிம்மம்


எதிலும் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும். எதிர்பாராத சிலரின் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். மாற்றம் உண்டாகும் நாள்.


கன்னி


அணுகுமுறையில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் முக்கியத்துவம் உண்டாகும். பணி நிமிர்த்தமான பயணங்கள் கைகூடும். சொந்த ஊர் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். அரசு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள்.


துலாம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தடைபட்ட சில வேலைகள் முடியும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் உண்டாகும். வியாபாரப் பணிகளில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் முயற்சிக்கு ஏற்ப உயர்வு உண்டாகும். தொல்லை குறையும் நாள்.


விருச்சிகம்


குழப்பமான சிந்தனைகளால் சோர்வு உண்டாகும். வருமானப் பற்றாக்குறை பற்றிய எண்ணங்கள் மேம்படும். வாகன வழியில் திடீர் செலவுகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். நினைத்த காரியங்களை நிறைவேற்ற உழைப்பை அதிகரிக்க வேண்டும். கல்விப் பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். நிதானம் வேண்டிய நாள்.


தனுசு


பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். சகோதரர் வழியில் உதவி கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சுபகாரிய முயற்சிகள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பொறுப்புகள் கிடைக்கும்.  வியாபாரத்தில் சில தந்திரங்களைப் புரிந்து கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். அமைதி வேண்டிய நாள்.


மகரம்


எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். குழந்தைகளின் வழியில் அனுகூலமான சூழல் ஏற்படும். அரசு வழியில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் மாற்றமான திட்டங்களின் மூலம் நினைத்ததை நிறைவேற்றுவீர்கள். வழக்குகளில் எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


கும்பம்


குடும்பத்தின் வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாருடன் இருந்துவந்த இன்னல்கள் குறையும். எதிலும் சிக்கனமாகச் செலவழிப்பீர்கள். பழைய வேலையாட்களை மாற்றி அமைப்பீர்கள். சக ஊழியர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். புதுமையான விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். கலை சார்ந்த பணிகளை நுட்பங்களை அறிவீர்கள். தெளிவு பிறக்கும் நாள்.


மீனம்


ஆடம்பர செலவுகளைக் குறைத்துக் கொள்ளவும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றமான சூழல் உண்டாகும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் தாமதமாகக் கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் ஏற்படும். உறவுகளை பற்றிய சிந்தனைகள் மேம்படும். பழமையான செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். சிக்கல்கள் அகலும் நாள்.