நாள் -  29.10.2023 (ஞாயிற்று கிழமை)


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 3.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


உடல் தோற்றம் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். கண்களில் இருந்துவந்த எரிச்சல் குறையும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். சஞ்சலமான சிந்தனைகளின் மூலம் குழப்பம் ஏற்படும். வியாபாரம் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமை வேண்டும். வரவு நிறைந்த நாள்.


ரிஷபம்


நினைத்த சில பணிகள் ஈடேறுவதில் தாமதம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். எதிர்பாராத சில பயணங்களால் அனுபவம் மேம்படும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பிற இன மக்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தைரியம் வேண்டிய நாள்.


மிதுனம்


தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் விலகும். செயல்பாடுகளில் மாற்றம் உண்டாகும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். சேமிப்பதற்கான சூழ்நிலையும், வாய்ப்புகளும் உண்டாகும். திறமைகளுக்கு உண்டான மதிப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். செலவு நிறைந்த நாள்.


கடகம்


வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசுப் பணிகளில் இருந்துவந்த தாமதம் விலகும். உத்தியோகத்தில் நல்ல மதிப்பு ஏற்படும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பயணங்களின் மூலம் ஆதாயம் மேம்படும். விவசாயப் பணிகளில் ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.


சிம்மம்


வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் நிமிர்த்தமான புதிய முடிவுகளில் சிந்தித்துச் செயல்பட வேண்டும். வெளிவட்டாரங்களில் மதிப்பு அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். ஆராய்ச்சி சார்ந்த விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். குழப்பம் நிறைந்த நாள்.


கன்னி


எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் அலைச்சலுக்குப் பின்பே நிறைவேறும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படலாம்.  அதிகாரப் பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். பற்கள் தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும்.  நெருக்கமானவர்களிடத்தில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். பயனற்ற விவாதங்களைக் குறைத்துக் கொள்வது நல்லது. பொறுமை வேண்டிய நாள்.


துலாம்


கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்குத் தெளிவு கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்பு அதிகரிக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள்.  கூட்டாளிகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். வியாபார அபிவிருத்திக்கான வாய்ப்புகள் ஏற்படும். நலம் நிறைந்த நாள்.


விருச்சிகம்


வழக்குகள் விஷயத்தில் திருப்பங்கள் உண்டாகும். நண்பர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதிய நபர்களின் அறிமுகத்தால் மாற்றம் ஏற்படும். நெருக்கடியான பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். உதவி கிடைக்கும் நாள்.


தனுசு


எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தந்தை வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். ஆன்மிக சிந்தனைகள் அதிகரிக்கும். சமயோஜிதமாக செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் ஏற்படும். சாஸ்திரம் தொடர்பான தெளிவு பிறக்கும். எதிலும் பகுத்தறிந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். தனம் நிறைந்த நாள்.


மகரம்


எதிலும் சிக்கனமாக இருப்பீர்கள். உற்பத்தித் துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தவறிய சில பொருட்கள் மீண்டும் கிடைக்கும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயணம் சார்ந்த துறைகளில் ஆதாயம் அடைவீர்கள். கவலை குறையும் நாள்.


கும்பம்


புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். புதுவிதமான யுக்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உயர்வு நிறைந்த நாள்.


மீனம்


எதிர்பார்த்திருந்த தனவரவுகள் கிடைக்கும். அறிவு நுட்பத்தை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். வீட்டினை விரிவுபடுத்துவீர்கள். உங்கள் கருதுக்களுக்கு மதிப்பு அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். முயற்சி ஈடேறும் நாள்.