நாள் - 12.11.2023 -  ஞாயிற்று கிழமை


நல்ல நேரம்:


காலை 7.00 மணி முதல் 8.00 மணி வரை


மாலை 3.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை


இராகு:


மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை


குளிகை:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி  வரை


எமகண்டம்:


நண்பகல் 12.00 மணி முதல் பகல் 1.30  மணி வரை


சூலம் - கிழக்கு


மேஷம்


பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். பழைய நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியைத் தரும்.  இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சகோதரர் வழியில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாகச் செய்து முடிப்பீர்கள். தம்பதியர்களுக்குள் ஒற்றுமை உண்டாகும். புகழ் நிறைந்த நாள்.


ரிஷபம்


போட்டிகளில் இருந்துவந்த தயக்கங்கள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். செய்யும் பணிகளில் மாற்றமான சூழல் உண்டாகும். கால்நடை பணிகளில் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். அரசு காரியங்களால் ஆதாயம் ஏற்படும். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். அமைதி வேண்டிய நாள்.


மிதுனம்


கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நெருக்கமானவர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணிபுரியும் இடங்களில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வியாபாரப் பணிகளில் மந்தமான சூழல் ஏற்படும். கடன் நிமிர்த்தமான பிரச்சனைகள் குறையும். வருத்தம் விலகும் நாள்.


கடகம்


சுரங்கப் பணிகளில் லாபகரமான வாய்ப்புகள் ஏற்படும். கல்விப் பணிகளில் ஆர்வமின்மை உண்டாகும். விவசாயப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். தந்தைவழி சொத்துக்களில் நிதானத்துடன் செயல்படவும். மனதில் இனம்புரியாத சில தேடல்கள் பிறக்கும். வாசனைத் திரவியங்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். பணிகளில் புதுவிதமான சூழல் உண்டாகும். பரிசு நிறைந்த நாள்.


சிம்மம்


வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். மனை விருத்திக்கான முயற்சிகள் கைகூடிவரும். எதிலும் பொறுமையுடன் செயல்பட்டால் ஆதாயம் அதிகரிக்கும். நினைத்த காரியங்களைச் செய்து முடிப்பீர்கள். தவறிப்போன சில ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். பொதுமக்கள் பணியில் ஆதரவான சூழல் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.


கன்னி


குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் அதிகரிக்கும். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர் பாலின மக்களால் அனுகூலம் உண்டாகும். விருப்பமான உடைகளை வாங்கி மகிழ்வீர்கள். நண்பர்களிடத்தில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தனம் நிறைந்த நாள்.


துலாம்


நெருக்கடியான சூழலைப் பொறுமையுடன் கையாளவும். எதிலும் திருப்தியற்ற சூழல் உண்டாகும். பணியில் மந்தமான சூழல் அமையும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் ஏற்படும். வெளியூர் பணி வாய்ப்புகள் சாதகமாக இருக்கும். வழக்கு தொடர்பான செயல்களில் இழுபறியான சூழல் ஏற்படும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். வெற்றி நிறைந்த நாள்.


விருச்சிகம்


வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கடன் சார்ந்தப் பிரச்சனைகள் குறையும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். கற்பனை கலந்த உணர்வுகளின் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி நிமிர்த்தமான வெளியூர் பயணங்கள் சாதகமாகும். மாற்றம் நிறைந்த நாள்.


தனுசு


வியாபார அபிவிருத்திக்கான சூழல் உண்டாகும். மனதளவில் தெளிவு பிறக்கும். நம்பிக்கையானவர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். நினைத்த காரியங்கள் கைகூடிவரும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் கைகூடும். வாழ்வு நிறைந்த நாள்.


மகரம்


வியாபார முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். தனவரவுகள் தாராளமாக இருக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பூர்வீக சொத்துக்களைச் சீரமைப்பீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.


கும்பம்


குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆராய்ச்சி சார்ந்த செயல்களில் ஆர்வம் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நலம் நிறைந்த நாள்.


மீனம்


சில விஷயங்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்துவீர்கள். நினைத்த சில பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உணர்வுப்பூர்வமாகப் பேசுவதைவிடச் சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். கனிவு வேண்டிய நாள்.