நாள் - 11.10.2023 - புதன் கிழமை 


நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 5.00 மணி முதல் மாலை 6.00


இராகு:


நண்பகல் 12.30 மணி முதல் 1.30 மணி வரை


குளிகை:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


எமகண்டம்:


காலை 7.30 மணி முதல் காலை 9.00


சூலம் - வடக்கு


மேஷம்


மேஷ ராசி அன்பர்களே.. சாந்தம் நிறைந்த நாளாக அமையும்.  ஆசிரியர்களின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். அவர்கள் என்ன சொல்கிறார்கள் எனக் கேட்டு பயனடையவும். உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பான சூழல் அமையும். புதுவிதமான இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் பொறுமையையும், வெள்ளை நிறம் வாழ்வில் தெளிவினையும் புரியவைக்கும். மகிழ்ச்சியாக இருங்கள்.


ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே.. பக்தி நிறைந்த நாள்..  எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். குடும்பத்தில் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். குடும்ப நபர்களிடம் வியாபாரத்தில் திடீர் மாற்றங்களால் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கான சூழல் உண்டாகும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் சமயோசித புத்தியையும், சாம்பல் நிறம் செயல்பாடுகளின் தன்மைகளையும் புரியவைக்கும்.


மிதுனம்


மிதுன ராசி அன்பர்களே.. முயற்சி நிறைந்த நாள். குடும்ப உறுப்பினர்களுடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களைப் புரிந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு தென்கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 1ம் எண் தன்னம்பிக்கையையும், மஞ்சள் நிறம் மனதளவில் இருந்துவந்த கவலைகளையும் போக்கும்.


கடகம்


கடக ராசி அன்பர்களே.. பரிவு நிறைந்த நாள். உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். அலுவலக பணிகளில் துரிதம் ஏற்படும். பேச்சு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 7ம் எண் சிந்தித்து முடிவெடுத்துச் செயல்படுவதையும், பழுப்பு நிறம் மேன்மையான வாய்ப்புகளையும் உருவாக்கும்.


சிம்மம்


சிம்ம ராசி அன்பர்களே.. துணிவு நிறைந்த நாள்.. தாழ்வு மனப்பான்மையின்றி செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கவனமாக இருக்கவும். இன்று உங்களுக்கு வடமேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் ஆழ்ந்த அறிவையும், சிவப்பு நிறம் புரட்சிகரமான சிந்தனைகளையும் மேம்படுத்தும்.


கன்னி


கன்னி ராசி அன்பர்களே.. மேன்மை நிறைந்த நாள். குடும்பத்தில் பொறுப்புகள் மேம்படும். தொழில் மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பயணங்களில் பிரியமானவர்களின் சந்திப்பு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் சாதகமாகச் செயல்படுவார்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் நல்லிணக்கத்தையும், இளநீலம் அறிவுக்கூர்மையையும் மேம்படுத்தும்.


துலாம்


துலாம் ராசி அன்பர்களே.. செல்வாக்கு நிறைந்த நாள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நினைத்த காரியங்கள் கைகூடும். பூர்வீக வீட்டைச் சீரமைப்பதற்கான எண்ணங்கள் உண்டாகும். இன்று உங்களுக்கு கிழக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் தர்ம சிந்தனைகளையும், பச்சை நிறம் நெருக்கத்தையும் மேம்படுத்தும்.


விருச்சிகம்


விருச்சிக ராசி அன்பர்களே.. இன்னல்கள் குறையும் நாள்.  விருச்சிக ராசி அன்பர்களே.. உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பிரபலமானவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். சமூகப் பணிகளில் மதிப்பு மேம்படும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 8ம் எண் சுயமதிப்பீட்டையும், நீலநிறம் வாழ்க்கை பற்றிய உண்மை நிலையினையும் விளக்கும்.


தனுசு


தனுசு ராசி அன்பர்களே.. சிக்கல் விலகும் நாள்.  தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். உறவினர்கள் வீட்டு சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். பழைய பிரச்சனைகள் குறையும். உத்தியோகப் பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 4ம் எண் உண்மை புரிதலையும், பொன் நிறம் மனதில் அமைதியையும் உருவாக்கும்.


மகரம்


மகர ராசி அன்பர்களே..மாற்றம் நிறைந்த நாளாக அமையவிருக்கும் மகர ராசி அன்பர்களே.. மனதளவில் சிறு சிறு தயக்கங்கள் ஏற்படும். வித்தியாசமான கற்பனைகள் உண்டாகும். போட்டித் தேர்வுகளில் மந்தமான சூழல் அமையும். இன்று உங்களுக்கு மேற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 9ம் எண் உயர்ந்த சிந்தனைகளையும், வெண் மஞ்சள் நிறம் மனதளவில் புதிய ஆற்றலையும் ஏற்படுத்தும்.


 கும்பம்


கும்ப ராசி அன்பர்களே..கவலைகள் விலகும். மகிழ்ச்சியாக இருங்கள்.  சொந்த பந்தங்களின் வருகை ஏற்படும். தொலைந்து போன பொருட்கள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அறிமுகம் உண்டாகும். சுப நிகழ்ச்சிகளால் மனமகிழ்ச்சி ஏற்படும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். இன்று உங்களுக்கு தெற்கு திசை அதிர்ஷ்டத்தையும், 6ம் எண் உழைப்பு மேம்படுத்துதலையும், வெளிர் நீலம் நிறம் உடனிருப்பவர்களை பற்றிய தெளிவினையும் உருவாக்கும்.


மீனம்


மீன ராசி அன்பர்களே..பொறுமை நிறைந்த நாள். உறவுகளின் மத்தியில் மதிப்பு உயரும். சுபகாரியங்களில் கலந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுகமான ஆதரவு கிடைக்கும். தந்திரமாகச் செயல்பட்டு சில செயல்களை செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுக்கு வடக்கு திசை அதிர்ஷ்டத்தையும், 5ம் எண் பல்துறைத் திறமைகளையும், இளஞ்சிவப்பு நிறம் புதிய உணர்வுகளையும் உருவாக்கும்.