நாள்: 20.03.2022


நல்ல நேரம் :


காலை 6 மணி முதல் காலை 7 மணி வரை


மாலை 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


காலை10.30 மணி முதல் காலை 11.30 மணி வரை


மதியம் 1.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை


இராகு :


காலை 4.30 மணி முதல் காலை 6.00 மணி வரை


குளிகை :


காலை 3.00 மணி முதல் காலை 4.30 மணி வரை


எமகண்டம் :


மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


சூலம் – மேற்கு




மேஷம் :


மேஷ ராசி நேயர்களே, இன்று மிகவும் சிறப்பான நாள். உங்களிடம் காணப்படும் உறுதி மற்றும் தைரியம் காரணமாக வெற்றியும் திருப்தியும் அடையலாம்.


ரிஷபம் :


ரிஷப ராசி நேயர்களே, இன்றைய நாள் இயந்திர கதியில் இயங்கும். இது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். இன்றைய சவால்களை சந்திக்க நீங்கள் திட்டமிட்டு செயல் பட வேண்டும்.


மிதுனம் :


மிதுன ராசி நேயர்களே, இன்று சாதகமான பலன்கள் கிடைக்காது. இன்று சிறிய விஷயங்களுக்குக் கூட எளிதில் உணர்ச்சிவசப்படுவீர்கள். இன்று மனதில் சமநிலையோடு இருங்கள். இனிய இசை கேட்பதன் மூலம் ஆறுதல் கிடைக்கும்.


கடகம் :


கடக ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உங்கள் இலக்குகளை எளிதில் அடைவீர்கள். இன்று அதிர்ஷ்டம் சிறந்த பலனைத் தரும்.


சிம்மம்:


சிம்ம ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அனுகூலமான நாள். நிறைய வாய்ப்புகள் காணப்படும். இன்றைய நாளை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திருப்தி நிறைந்து காணப்படும்.


கன்னி :


கன்னி ராசி நேயர்களே, உங்கள் மனதில் அவநம்பிக்கை உணர்வு காணப்படும். இந்தப் போக்கை நீங்கள் சமாளிக்க வேண்டும். கடினமான சூழ்நிலை காரணமாக இன்று சுமையான நாளாக உணர்வீர்கள்.


துலாம் :


துலாம் ராசி நேயர்களே, இன்று கடினமான சூழ்நிலை கானப்படும். எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக் கொள்ளவேண்டும். உங்கள் முயற்சி மற்றும் சிறப்பாக திட்டமிடுவதன் மூலம் உங்கள் இலக்குகளை அடையலாம்.


விருச்சிகம் :


விருச்சிக ராசி நேயர்களே, இன்று வருத்தத்துடன் காணப்படுவீர்கள். உணர்ச்சி வசப்படக் கூடிய நிலை இருப்பதால் அமைதியாக இருப்பது நல்லது. சமாளித்து அமைதியாக இருக்க வேண்டும். இசை கேட்பதன் மூலம் ஆறுதல் பெறலாம்.


தனுசு :


தனுசு ராசி நேயர்களே, இன்று உங்கள் இலக்குகளை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். முக்கிய முடிவுகள் நல்ல பலன் தரும். நீங்கள் இன்று நம்பிக்கையுடன் காணப்படுவீர்கள்.


மகரம் :


மகர ராசி நேயர்களே, இன்றைய கடினமான சூழ்நிலையை சமாளிக்க உங்களுக்கு பொறுமை தேவை. எந்தவித இழப்பும் ஏற்படாத வகையில் திட்டமிட வேண்டும். இன்று உறுதியான அணுகுமுறை தேவை.


கும்பம் :


கும்ப ராசி நேயர்களே, இன்று நீங்கள் அதிகம் எதிர்பார்க்க இயலாது. என்றாலும் நம்பிக்கையுடன் செயல்படுங்கள். நேர்மறை கண்ணோட்டம் இன்று மிகவும் அவசியம்.


மீனம்:


மீன ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கக் காண்பீர்கள். உங்கள் இலக்குகளை நம்பிக்கையுடன் அமைத்துக் கொள்வீர்கள். உங்கள் நண்பர்கள் மற்றும் நெருங்கியவர்களிடம் நல்ல உறவு முறையைப் பராமரிப்பீர்கள்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண