நாள்:  19.09.2023 - செவ்வாய்கிழமை


நல்ல நேரம்:


காலை 7.45 மணி முதல் காலை 8.45 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


குளிகை:


நண்பகல் 12.00 மணி முதல்  பகல் 1.30 மணி வரை


எமகண்டம்:


காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை


சூலம் - வடக்கு


மேஷம்


மேஷ ராசி அன்பர்களே...எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். நலம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். ஆரோக்கியம் மேம்படும். பயணங்களில் இருந்துவந்த தடைகள் குறையும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உங்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு முடிவு கிடைக்கும். எதிர்ப்புகள் குறையும் நாள். எல்லாம் நல்லதே நடைபெறும் நாள்.


ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே.. கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். போட்டிகளில் சாதகமான சூழல் உண்டாகும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதளவில் புத்துணர்ச்சி ஏற்படும். மனம் நிம்மதி அடையும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். எடுத்துச் செல்லும் உடைமைகளில் கவனம் வேண்டும். தடைபட்ட சில பணிகளைச் செய்து முடிப்பீர்கள். தடைகள் விலகும் நாள்.


மிதுனம்


மிதுன ராசி அன்பர்களே.. மனதில் புதுவிதமான லட்சியங்கள் பிறக்கும். புதிய முன்னெடுப்புகளை எடுப்பீர்கள். பாரம்பரியம் தொடர்பான தேடல் அதிகரிக்கும். கலை நுட்பமான செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நிதி தொடர்பான நெருக்கடிகள் குறையும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு மேம்படும். நிர்வாகத்துறையில் திறமைகள் வெளிப்படும். வணிகத்தில் விவேகத்துடன் செயல்படவும். வெற்றி நிறைந்த நாள்.


கடகம்


கடக ராசி அன்பர்களே.. தனிப்பட்ட விஷயங்கள் பகிர்வதைத் தவிர்க்கவும். பிரச்சார பணிகளில் சாதகமான வாய்ப்புகள் அமையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உற்பத்தித் துறைகளில் அனுகூலமான சூழல் ஏற்படும். சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் பிறக்கும். தந்தை பற்றிய கவலைகள் தோன்றி மறையும். உணவுத்துறைகளில் திறமைகள் வெளிப்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.


சிம்மம்


சிம்ம ராசி அன்பர்களே..பாகப்பிரிவினைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனை விருத்தி சார்ந்த முயற்சிகள் கைகூடும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எழுத்து துறைகளில் புதிய அனுபவம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். குறுகிய தூரப் பயணங்களின் மூலம் புத்துணர்ச்சி அடைவீர்கள். கற்பித்தல் பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். மதிப்பு மேம்படும் நாள். மாற்றங்களால் புதிய நிறைய ஆச்சரியங்களை உண்டாக்கும்.


கன்னி


கன்னி ராசி அன்பர்களே.. நண்பர்களால் புதிய அனுபவம் ஏற்படும். முகத்தில் தெளிவு உண்டாகும். குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவது நல்லது. தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முயற்சிகளில் கவனம் வேண்டும். ஆனால், மனம் தளராமல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.


துலாம்


துலாம் ராசி அன்பர்களே.. கடன் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். கடன் வாங்கவோ கொடுக்கவோ வேண்டாம்.  பணிபுரியும் இடத்தில் பொறுப்புகள் மேம்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். வித்தியாசமான கனவுகள் தோன்றி மறையும். நிர்வாக துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தனம் சார்ந்த விஷயங்களில் நிதானம் வேண்டும். தாமதம் குறையும் நாள்.


விருச்சிகம்


விருச்சிக ராசி அன்பர்களே.. சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். எதிலும் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். வேள்விப் பணிகளில் ஈடுபாடு ஏற்படும். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் கவனத்துடன் செயல்படவும். புதுவிதமான இடங்களுக்குச் சென்று வருவீர்கள். ஜாமின் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வரவுகள் மேம்படும் நாள்.


தனுசு


தனுசு ராசி அன்பர்களே.. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மூத்த உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். விவேகமான செயல்பாடுகளின் மூலம் மாற்றம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். இணையம் சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். சிக்கல் குறையும் நாள்.


மகரம்


மகர ராசி அன்பர்களே.. சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எதிலும் பேராசையின்றி செயல்படவும். புதிய முயற்சிகளில் அனுபவமும், லாபமும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதரவான சூழல் ஏற்படும். தனித்துச் செயல்படுவது தொடர்பான சூழல் அமையும். தொழில் சார்ந்த துறைகளில் புதிய விஷயங்களை அறிவீர்கள். நன்மை நிறைந்த நாள்.


கும்பம்


கும்ப ராசி அன்பர்களே.. தந்தை வழியில் இருந்துவந்த நெருக்கடியான சூழல் மறையும். திருப்பணி விஷயங்களில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். இறை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு உண்டாகும். ஆராய்ச்சி சார்ந்த கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். நிர்வாக துறைகளில் பொறுமை வேண்டும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விவேகம் வேண்டிய நாள்.


மீனம்


மீன ராசி அன்பர்களே.. செயல்பாடுகளில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்களைப் பற்றிய புரிதல் மேம்படும். தம்பதிகளுக்கு இடையே அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரம் நிமிர்த்தமான செயல்களில் விவேகத்துடன் செயல்படவும். பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பங்கள் ஏற்படும். பயனற்ற பேச்சுக்களைக் குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.