நாள்: 18.03.2023 - சனிக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
குளிகை :
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
சூலம் - கிழக்கு
மேஷம்
1வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். உத்தியோக பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உறவினர்களின் வழியில் உதவிகள் கிடைக்கும். அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு ஆதாயம் உண்டாகும். சொந்த ஊர் செல்வது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மாணவர்களுக்கு கற்றல் திறனில் மாற்றம் ஏற்படும். தாயாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அறம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வெற்றி கிடைக்கும் நாள்.
ரிஷபம்
புதிய தொழில்நுட்ப பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதில் தன்னம்பிக்கை மேம்படும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் சாதகமாக அமையும். புதிய முயற்சிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். சட்டம் சார்ந்த விஷயங்களில் உள்ள சில நுணுக்கங்களை அறிவீர்கள். உயர்கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
மிதுனம்
எதிர்பாராத சில செய்திகளின் மூலம் விரயங்கள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். தனவரவுகளில் தாமதம் உண்டாகும். கொடுக்கல், வாங்கல் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். மற்றவர்களிடத்தில் அதிக உரிமைகள் கொள்ள வேண்டாம். வாடிக்கையாளர்களிடம் கனிவுடன் செயல்படவும். பயனற்ற விவாதங்களை குறைத்து கொள்ளவும். கனிவு வேண்டிய நாள்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோக ரீதியாக வெளிவட்டார நட்பு அதிகரிக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் கிடைக்கும். வணிகம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக முடியும். ஆதாயம் நிறைந்த நாள்.
சிம்மம்
உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உடனிருப்பவர்களை பற்றிய புதிய கண்ணோட்டம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வாகன பயணங்களில் விவேகம் வேண்டும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை குறைத்து கொள்ளவும். மனதை உறுத்திய சில பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். கவனம் வேண்டிய நாள்.
கன்னி
தனவரவை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோக பணிகளில் உள்ள சில சூட்சுமங்களை அறிவீர்கள். பிள்ளைகளின் உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.
துலாம்
குழப்பமான சில விஷயங்களுக்கு பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். மனதில் இருந்த கவலைகள் குறையும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். தந்தையின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கல்வியில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். நன்மை நிறைந்த நாள்.
விருச்சிகம்
குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே புரிதல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். போட்டிகளில் ஆர்வம் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.
தனுசு
குடும்ப உறுப்பினர்களின் ஆதரவின் மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலைகளை அறிந்து பேசுவது நன்மையை உண்டாக்கும். செய்கின்ற செயல்பாடுகளில் கவனம் வேண்டும். புதிய நபர்களின் அறிமுகத்தின் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் உள்ள நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். தாமதம் குறையும் நாள்.
மகரம்
உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் அவ்வப்போது தோன்றி மறையும். தற்பெருமை சார்ந்த சிந்தனைகளை குறைத்து கொள்ளவும். வாழ்க்கைத் துணைவர் பிடிவாதமாக செயல்படுவார்கள். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். மனதில் இருக்கும் ரகசியங்கள் பகிர்வதை குறைத்து கொள்ளவும். குணநலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். சோர்வு குறையும் நாள்.
கும்பம்
தொழிலில் முதலீடுகள் செய்யும் பொழுது சிந்தித்து செயல்படவும். பணிமாற்றம் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நெருக்கமானவர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். பிறமொழி பேசும் மக்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் தாமதமாக முடியும். செல்வாக்கு மேம்படும் நாள்.
மீனம்
சேமிப்பை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கொடுக்கல், வாங்கலில் லாபம் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்களின் மூலம் மேன்மை உண்டாகும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். கடினமான பணிகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். கலை சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். தடைகள் விலகும் நாள்.