நல்ல நேரம் :


காலை 9.30 மணி முதல் கசாலை 10.30 மணி வரை


மாலை 4.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை


கௌரி நல்ல நேரம் :


மதியம் 12.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை


மாலை 6.30 மணி முதல் மாலை 7.30 மணி வரை


இராகு :


காலை 10.30 மணி முதல் மதியம் 12 மணி வரை


குளிகை :


காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை


எமகண்டம் :


மதியம் 3 மணி முதல் மதியம் 4.30 மணி வரை


சூலம் – மேற்கு


மேஷம் :


மேஷ ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு புகழ் வாய்ந்த நாளாக அமையும். இந்த நாள் உங்களுக்கு ஆதாயமான நாளாக அமையும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிட்டும். அரசியலில் ஈடுபடுபவர்களுக்கு இந்த நாள் ஆதாயமான நாளாக அமையும்.


ரிஷபம் :


ரிஷப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு சுபமான நாளாக அமையும்.  தொலைபேசி வழித்தகவல்களால் ஆனந்தம் உண்டாகும். நீண்ட நாள் சந்திக்க நினைத்த நபரைச் சந்தித்து மகிழ்வீர்கள். தங்கம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும்.


மிதுனம் :


மிதுன ராசிக்காரர்களே இந்த நாள் உங்கள் மனதில் தேவையில்லாத பயம் உண்டாகும். ஆலய வழிபாடு மேற்கொண்டு அமைதி காணலாம். தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்திலும், தொழில் புரியும் இடத்திலும் சுமூகமாக செல்ல வேண்டும்.


சிம்மம் :


சிம்ம ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். சகோதரர்கள் வழியில் மிகப்பெரிய உதவிக்கரம் கிட்டும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருள் ஒன்றை வாங்கி மகிழ்வீர்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்வதற்கான சூழல் ஏற்படலாம்.


கன்னி :


கன்னி ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு செலவான நாளாக அமையும். ஆனால், இந்த செலவு உங்களுக்கு மிகப்பெரிய ஆதாயத்தை தேடித்தரும்.


துலாம் :


துலாம் ராசிக்காரர்களே இந்த நாள் நீங்கள் அமைதியை கடைபிடிக்க வேண்டும். பணிபுரியும் இடங்களில், குடும்பத்தில் தேவையில்லாத குழப்பங்கள், அதிருப்திகள் உண்டாகலாம். ஆனாலும், அமைதியை கடைபிடித்தால் மிகப்பெரிய சிக்கல்களை தவிர்க்கலாம். சிவபெருமானை வழிபடுவது மன நிம்மதியை தரும்.


விருச்சிகம் :


விருச்சிக ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு பெருமையான நாளாக அமையும். தொட்டதெல்லாம் துலங்கும் நாளாக அமையும். இன்ப அதிர்ச்சி இன்று நடக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் அருமையான வாய்ப்புகள் அமையும். மனதில் புத்துணர்ச்சி பிறக்கும்.


தனுசு :


தனுசு ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். தேர்தலில் போட்டியிட உள்ள தனுசு ராசிக்காரர்களே இந்த நாளே உங்களுக்கு வெற்றி பெற்றது போன்ற நிறைவு மனதில் உண்டாகும். காதலர்கள் இடையே புரிதல் அதிகமாகும்.


மகரம் :


மகர ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு போட்டியான நாளாக அமையும். இந்த போட்டி ஆரோக்கியமானதாக அமையும். அதேசமயத்தில் தொழில் எதிரிகளிடம் மிகுந்த கவனத்துடனும், எச்சரிக்கையுடனும் செயல்பட வேண்டும். துர்க்கையம்மனை வழிபடுவது மனதிற்கு நிம்மதி தரும்.


கும்பம் :


கும்ப ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு நிறைவான நாளாக அமையும். மனதில் புது தன்னம்பிக்கை பிறக்கும். தொலைபேசி வழித் தகவல்களால் மனதிற்கு நிறைவு ஏற்படும். நண்பர்கள், சகோதரிகள் இடையே பாசம் அதிகரிக்கும்.


மீனம் :


மீன ராசிக்காரர்களே இந்த நாள் உங்களுக்கு இனிமையான நாளாக அமையும். எதிர்பாராத நற்செய்தி ஒன்று உங்களைத் தேடி வரும். இத்தனை நாட்களாக வசூலாகாத கடன் தொகை வசூலாகும். வாகனங்கள் வாங்குவதற்கு யோகம் உண்டு. வெற்றி வசப்படும் நாளாக இந்த நாள் அமையும்.