RasiPalan Today 17th August:
நாள் - 17.08.2023 - வியாழக்கிழமை
நல்ல நேரம்:
காலை 10.45 மணி முதல் காலை 11.45 மணி வரை
இராகு:
மதியம் 1.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை
குளிகை:
காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை
எமகண்டம்:
காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை
சூலம் - தெற்கு
மேஷம்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பக்தி நிறைந்த நாள்.
ரிஷபம்
கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் உயர்வான சூழ்நிலைகள் ஏற்படும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். விவசாய பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்குகளில் இருந்துவந்த இழுபறிகள் குறையும். மனை சார்ந்த வியாபாரத்தில் ஒத்துழைப்பு மேம்படும். வெற்றி நிறைந்த நாள்.
மிதுனம்
உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வரவுகள் மேம்படும் நாள்.
கடகம்
பேச்சுவார்த்தைகளின் மூலம் சாதகமான சூழல் அமையும். ஆடை, ஆபரணச் சேர்க்கை ஏற்படும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு குறையும். பொருளாதார சிக்கல்கள் நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை பிறக்கும். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்னல்கள் குறையும் நாள்.
சிம்மம்
வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிலும் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். கல்வி பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். வேலையாட்களை பற்றிய புரிதல் மேம்படும். வாழ்க்கைத் துணைவர் ஆதரவாக இருப்பார். உங்களின் பலம் மற்றும் பலவீனங்களை அறிந்து கொள்வீர்கள். பணி மாற்றம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். நிறைவு நிறைந்த நாள்.
கன்னி
ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயணங்களில் லாபகரமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது நல்லது. வியாபாரத்தில் மிதமான லாபம் ஏற்படும். வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். பணிவு வேண்டிய நாள்.
துலாம்
மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். மூத்த உடன்பிறப்புகளால் ஆதாயம் உண்டாகும். வரவுகளில் இருந்துவந்த இழுபறியான சூழல் மறையும். சேமிப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் அதிகரிக்கும். நண்பர்களின் வருகையால் புதிய வாய்ப்புகள் ஏற்படும். எதையும் சமாளிக்கும் பக்குவம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். சிரமம் விலகும் நாள்.
விருச்சிகம்
எதிர்பாராத சில பயணங்களின் மூலம் மாற்றம் ஏற்படும். உயர்கல்வி தொடர்பான சிந்தனைகள் உண்டாகும். அரசு பணிகளில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் செயல்படவும். அணுகுமுறைகளில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆன்மிகப் பணிகளில் ஆர்வம் உண்டாகும். சமூகப் பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். அனுபவ முடிவுகளால் அனுகூலம் உண்டாகும். இரக்கம் நிறைந்த நாள்.
தனுசு
உயர் அதிகாரிகளின் மூலம் ஒத்துழைப்பான சூழல் ஏற்படும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பணியாட்களால் ஏற்பட்ட இன்னல்கள் குறையும். பிரீதி நிறைந்த நாள்.
மகரம்
நினைத்தது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் இருக்கும். காப்பீடு தொடர்பான செயல்களில் ஆர்வம் ஏற்படும். செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். உயர் அதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபாரத்தில் ஒத்துழைப்பற்ற சூழல் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் சோர்வு உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.
கும்பம்
போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சகோதரர் வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்களின் வழியில் ஒத்துழைப்பு உண்டாகும். நலம் நிறைந்த நாள்.
மீனம்
உத்தியோகம் தொடர்பான பணிகளில் மேன்மை உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். திடீர் யோகத்தால் மாற்றம் பிறக்கும். தடைகள் குறையும் நாள்.